ரஜினி சார் நடிக்கும் படத்தை இயக்குவேன் என உறுதிபட தெரிவித்துள்ளார் அட்லீ. இது பற்றிய விவரம் காண்போம்..
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான இளம் இயக்குனர் அட்லீ. தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தை இயக்கியதை தொடர்ந்து ‘பேபி ஜான்’ படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து, சல்மான்கானை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இந்நிலையில் அட்லீ கூறியதாவது,
‘நான் ரஜினியின் தீவிர ரசிகன். ரஜினி சாரின் வெறியன் என்று கூட சொல்லலாம். அவரை பார்த்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.
மேடையில் எப்படி பேசுவது, பிறரிடம் பண்பாக எப்படி நடந்து கொள்வது என நிறைய விஷயங்களை அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
அவர் நடித்த ‘தளபதி’ திரைப்படத்தை பார்த்து வளர்ந்தவன் நான். ரஜினி சாருடன் 300 நாட்கள் ‘எந்திரன்’ படப்பிடிப்பில் இருந்திருக்கிறேன். அவருக்கு என்னை நன்றாக தெரியும். என்னை எப்போதுமே ‘கண்ணா’ என்று தான் அழைப்பார்.
எனக்கு இரண்டு, மூன்று முறை ரஜினி சாரை வைத்து படம் இயக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அவர்கள் சொன்ன காலகட்டத்திற்குள் என்னால் தயாராக முடியவில்லை. சரியான கதை அமைந்தால் கண்டிப்பாக 100 சதவீதம் நானும் ரஜினி சாரும் ஒன்றாக பணியாற்றுவோம். இதில், எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. கண்டிப்பாக, என் இயக்கத்தில் ரஜினி சார் ஒரு படத்தில் நடிப்பார்’ என்றார் நம்பிக்கையுடன் அட்லீ.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி கூலி, ஜெயிலர்-2 என மின்னலாக தெறித்துக் கொண்டிருக்கிறார். இச்சூழலில், அடுத்ததாக, ரஜினியை இயக்க மணிரத்னம், மாரி செல்வராஜ் ஆகியோர் எதிர்பார்ப்பில் உள்ளனர். இவர்களுடன் அட்லீயுடன் இணைந்திருக்கிறார். மேலும், அட்லியின் குருநாதர் ஷங்கர் மிகவும் விரும்பிய ரஜினி சாரின் ‘பயோபிக்’ படம்.
இதில், யார் இயக்குவது என்பது ரஜினி கையில்.! பொறுத்திருந்து பார்ப்போம்.!