ரஜினி நடித்த ‘கூலி’ பட ஆடியோ லான்ச் நாளை பார்க்கலாம்: முழு விவரம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் வருகிற 14-ந்தேதி காலைக்காட்சி 9 மணி முதல் கோலாகலமாய் தொடங்குகிறது. இப்படத்தின் ஆடியோ லான்ச்சை காண்பதற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘கூலி’ பட இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. வழக்கம்போல ரஜினியின் பேச்சு அனைவரையும் ஈர்த்தது. நிகழ்ச்சியில் ‘கூலி’ பட கெட்டப்பிலேயே அமீர்கான் வந்திருந்தார். மேலும், நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்து சத்யராஜ் பேசியிருந்தார். மற்றும் ஸ்ருதிஹாசன், அனிருத் பேச்சு எல்லாமே இணையத்தில் டிரெண்டானது.

ஆனாலும், முழு ஆடியோ லான்ச்சை பார்ப்பதற்கு ரசிகர்களாக இல்லாத திரை ஆர்வலர்களும் ஆவலாய் உள்ளனர். ஆதலால், சன் நெக்ஸ்ட் ஓடிடியில் நாளை (ஆகஸ்ட் 10-ந்தேதி) இசை வெளியீட்டு விழாவை ரசிகர்கள் பார்க்கலாம். அதேபோல் சன் டிவி தொலைக்காட்சியிலும் நாளை முதல் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பாக இருக்கிறது.

தனது எல்சியூவில் இல்லாமல் தனிக்கதையாக கூலியை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். முழுக்க முழுக்க ஆக்சன் பாணியில் அதிரும் ரணகளமாய் இப்படம் உருவாகியுள்ளதால் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. வில்லனாக நாகர்ஜுனாவும், சிறப்பு தோற்றத்தில் அமீர்கானும் மிரட்டலாக வருகின்றனர். மேலும் உபேந்திரா, சவுபின் சாகீர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

rajini in coolie movie audio launch streaming sun nxt ott soon
coolie moviedirector lokesh kanagarajRajinikanthரஜினிகாந்த்லோகேஷ் கனகராஜ்