எது ஊழல்? எது திரைமறைவு?: தளபதி விஜய் மீது, தயாரிப்பாளர் பாய்ச்சல்..

எது ஊழல்? எது திரைமறைவு? எது திருட்டு? என்ற சர்ச்சைகளுக்கு மத்தியில், தளபதி விஜய் வாங்கிய சம்பளம் குறித்து, தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் வெளிப்படையாக பேசியதை தற்போது வைரலாகி வருகிறது.

ஆம்.., தளபதி விஜய், 27ஆம் தேதி தனது தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டினை நடத்தி முடித்தார். இதில்,சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் வந்தனர்.

மாநாட்டு மேடையில் தனது முதல் அரசியல் கன்னிப்பேச்சினைப் பேசிய விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமரும் காலத்தில் தமிழ்நாட்டில் ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க முழு மூச்சாக செயல்படுவோம்’ என முழங்கினார்.

இந்நிலையில், விஜய் குறித்து பிரபல தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் பேசியதை இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். இது குறித்துப் பார்ப்போம் வாங்க..

பிரபல தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன், இயக்குநர் ஏ. எல். விஜய்யின் தகப்பனார். தனது மகன் ஏ.எல். விஜய் இயக்கிய ‘தலைவா’ படத்தினை தயாரித்தார்.

மேலும், இந்தப் படம் ரிலீஸ் அனபோது, அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவால் பெரும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதனால், படம் தமிழ்நாட்டில் குறிப்பிடப்பட்ட தேதியில் ரிலீஸ் ஆகவில்லை. அண்டை மாநிலங்களில் ரிலீஸ் ஆன பின்னர்தான் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஏ. எல். அழகப்பன் அளித்த பேட்டியில், “தலைவா படத்திற்கு நான் விஜய்க்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தேன் என உங்களுக்குத் தெரியுமா? சினிமாவில் உட்ச நட்சத்திரங்களுக்கு அவர்களின் சம்பளத்தை பாதியை செக்-ஆக கொடுப்போம்.

பாதி சம்பளத்தை பணமாக கொடுத்து விடுவோம். இல்லையென்றால் 30 சதவீதம் வருமானவரி கட்டவேண்டும். இது வருமான வரி அதிகாரிகளுக்கே தெரியும். நாங்களும் அப்படித்தான் வாங்குவோம், அப்படித்தான் கொடுப்போம்” என கூறினார்.

தற்போது, இந்த வீடியோவை பலரும் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். ஆனால், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் வீட்டிற்கு வருமானவரித் துறையினர் சோதனையிடச் சென்றபோது, விஜய்யின் அப்போதைய சம்பளம் ரூபாய் 100 கோடி என்பது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிய வந்தது.

இதுமட்டும் இல்லாமல், அந்த சோதனையின்போது விஜய்யிடம் கருப்புப் பணம் இருப்பதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

அதேநேரத்தில், விஜய்யின் 69-வது படத்திற்கு அவருக்கு ரூபாய் 275 கோடிகள் சம்பளம் என பேசப்பட்டு வருகின்றது.

சம்பளம் அதிகமானால், வரும் வசூலும் அதிகமாகும் என்ற எதிர்பார்ப்பு தானே.!

producer azhagappan opens about vijay salary black money
politicsThalapathy Vijaytvk partyஊழல்ஏ.எல்.அழகப்பன்வருமான வரி