லைஃப் மாறினாலும் நான் மாறவில்லை: பிரதீப் ரங்கநாதன் பேச்சு..

கீர்த்தீஸ்வரன் இயக்கி வெளியான ‘டியூட்’ படம் தற்போது 100 கோடி வசூல் பெற்று வெற்றி அடைந்திருக்கிறது. படத்தில் பிரதீப்பின் நடிப்பு இளைஞர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றது. டியூட் படத்தின் மூலம் பிரதீப் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் தனது லைப் ஸ்டைல் பற்றி பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது, தற்போது லைப் ஸ்டைல் கண்டிப்பாக மாறியுள்ளது. முன்பெல்லாம் 400 ரூபாய் ஷர்ட் தான் வாங்குவேன். லோக்கல் பிராண்ட் ஷர்ட் தான் வாங்குவேன். டூப்ளிகேட் ஷர்ட் தான் போடுவேன்.

ஆனால், தற்போது பிராண்டட் ஷர்ட் வாங்க பணம் உள்ளது. இருந்தாலும், அதனை வாங்க மனசுதான் இல்லை. அதிகபட்சம் 4000 ருபாய் வரை ஷர்ட் வாங்குவேன். ஹீரோவான பிறகு, லைப் ஸ்டைல் கண்டிப்பாக மாறியிருக்கு. ஆனால், தனிப்பட்ட நபராக நான் மாறவில்லை. நான் முன்பு எப்படி இருந்தேனோ, தற்போதும் அப்படியேதான் இருக்கின்றேன்’ என கூறியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், பிரதீப் ரங்கநாதன் எப்போதும் இதேபோல இருக்க வேண்டும் என கூறி வருகின்றனர். அவரின் வெற்றியை பெரும்பாலான இளைஞர்கள் தங்களின் வெற்றியாகவே பார்த்து வருகின்றனர்.

முன்னதாக ‘லவ் டுடே’ படத்தின் லாஞ்சின்போது மேடையில் பிரதீப் ரங்கநாதன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ஒருவர் பிரதீப் ரங்கநாதனை விமர்சனம் செய்தார். அந்த விமர்சனத்தைக்கூட பிரதீப் பாசிட்டிவாகவே எடுத்துக்கொண்டு முன்னேறியுள்ளார்.

pradeep ranganathan about his lifestyle now
dude movielife stylePradeep Ranganathanபிரதீப் ரங்கநாதன்வெற்றி