நடிகர் சிவகுமார் குடும்பம் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார்

நடிகர் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சமூக வலைதளத்தில் ஆதாரமற்ற மற்றும் அவதூறான கருத்துகளைப் பரப்பியதாகக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் சார்பில் அளிக்கப்பட்டுள்ள அந்தப் புகார் மனுவில், சமீபத்தில் முகநூலில் வெளியான வீடியோ ஒன்றில் நடிகர் சிவகுமார், அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய சமூகப் பணிகள் குறித்து தனிப்பட்ட கண்ணியத்தைப் பாதிக்கும் வகையிலான குற்றச்சாட்டுகளும், இழிவான கருத்துகளும் பொதுவெளியில் பகிரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும், சம்பந்தப்பட்ட வீடியோ மற்றும் பதிவுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், விசாரணையில் சட்டவிரோதமாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டால், பொருந்தக்கூடிய சட்டப்பிரிவுகளின் கீழ் வீடியோவில் இடம்பெற்ற பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் அனைவரின் மீதும் உரிய மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பெருநகர சென்னை காவல் ஆணையாளரிடம் அதிகாரப்பூர்வமாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Police Complaint Seeking Action Against Those Accused of Defaming Actor Sivakumar’s FamilySivakumar