பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத புதிய திருப்பமாக, இந்த வார எவிக்ஷன் முடிவு சக போட்டியாளர்களின் கைகளுக்கு சென்றுள்ளது. அதாவது, நாமினேட் செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களில் யார் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதை போட்டியாளர்களே முடிவு செய்ய உள்ளனர்.
இந்த வார எவிக்ஷனுக்காக கேப்டன் வினோத் பாபுவால் தன்யா பல்லத், முனியம்மாள் மற்றும் சவின்யா ஆகிய மூவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். வழக்கமாக பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் எவிக்ஷன் நடைபெறும் நிலையில், இந்த முறை முற்றிலும் மாறுபட்ட வகையில் முடிவு எடுக்கப்பட உள்ளது.
இதனால் பிக் பாஸ் வீட்டில் நட்பு, பகை மற்றும் தனிப்பட்ட உறவுகள் அனைத்தும் சோதனைக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. போட்டியாளர்கள் விளையாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு யாரை வெளியேற்றுவது என்பதை முடிவு செய்வார்களா? அல்லது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளும் இந்த முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- Advertisement -
இதற்கிடையே, தனது நாமினேஷன் குறித்து முனியம்மாள் ஏற்கனவே அதிரடியாகப் பேசியிருந்தார். தன்னைப் பார்த்து பயந்துதான் நாமினேட் செய்கிறார்கள் என்றால், அந்தப் பெருமையுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், தன்னைக் கண்டு பயப்படவில்லை என்றால், தன்னுடன் போட்டியிட்டு தங்களது திறமையை நிரூபிக்குமாறும் சக போட்டியாளர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.
இந்நிலையில், எவிக்ஷன் அதிகாரமே போட்டியாளர்களின் கைகளில் இருக்கும் நிலையில், தன்யா பல்லத், முனியம்மாள், சவின்யா ஆகிய மூவரில் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியை தினமும் இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் காணலாம். JioHotstar தளத்தில் எப்போது வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்யலாம். மேலும், பிக் பாஸ் வீட்டின் 24×7 நேரலை ஒளிபரப்பையும் JioHotstar-ல் காணலாம்.