* லவ் மேரேஜ், படை தலைவன் ஆகிய படங்களின் வெளியீடு பற்றிப் பார்ப்போம்..
அறிமுக இயக்குநர் சண்முகப் பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘லவ் மேரேஜ்’ படம் ஜூன் 27-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யராஜ் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளராக மதன் கிறிஸ்டோபர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரிந்துள்ளனர். இப்பட பாடல்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. கதை என்னவென்றால், ‘நாயகனுக்கு திருமணம் தாமதமாவதால், இந்த சமூகத்தில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே இப்படம்’ என படக்குழு தெரிவித்துள்ளது.
* விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியன் நாயகனாக நடித்துள்ள படம் ‘படை தலைவன்’. இப்படம் மே 23-ந்தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், திரையரங்குகள் சரியாக கிடைக்காத காரணத்தினால், இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஜூன் 13-ந்தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
அன்பு இயக்கியுள்ள இப்படத்தில் சண்முகப் பாண்டியன், கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், கருடன் ராம் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் பெரும்பாலான காட்சிகளை காடுகளுக்குள் படமாக்கி இருக்கிறார்கள்.
இளையராஜா இசையமைத்துள்ளார். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் விநியோக உரிமையினை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.