தயாரிப்பாளர் ஆனார் நித்யா மேனன்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த லியோ விஷன் நிறுவனம், நடிகை நித்யா மேனனின் கேயுரி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் டி.கே இயக்கும் இப்படத்தில் நித்யா மேனன் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஃபேண்டஸி மற்றும் டார்க் காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தை லியோ விஷன் சார்பில் வி.எஸ். ராஜ்குமார் மற்றும் கேயுரி புரொடக்ஷன்ஸ் சார்பில் நித்யா மேனன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

- Advertisement -

படத்திற்கு ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இயக்குநர் விக்ரம் கே. குமார் இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றுள்ளார்.

லியோ விஷன், கேயுரி புரொடக்ஷன்ஸ், நித்யா மேனன், இயக்குநர் டி.கே மற்றும் விக்ரம் கே. குமார் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் இப்படம், வழக்கமான திரைப்பட அனுபவத்திலிருந்து மாறுபட்ட ஒரு ஃபேண்டஸி டார்க் காமெடி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இதன் மூலம் நித்யா மேனனின் பான் இந்தியா படமாகவும் இது அமையவுள்ளது.

இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Nithya MenenNithya Menen Turns Producerநித்யா மேனன்