என்ன தகுதி வேண்டும்?: ஹரீஸ் கல்யாண் ஆதங்கம்..

ஹரீஸ் கல்யாண் நடித்து வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் வரவேற்பு பெற்றது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து அவர் களம் இறங்கியுள்ள நிகழ்வு பற்றிக் காண்போம்..

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் ‘டீசல்’ படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி திரைக்கு வருகிறது. இதற்கிடையில் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியாகும் பேச்சுக்கு ஹரிஷ் கல்யாண் ஆதங்கம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது,

‘என் சினிமா பயணத்தில் நான் நடித்த படம் தீபாவளிக்கு களமிறங்குவது இது முதல்முறை. இது மகிழ்ச்சி அளித்தாலும், சில விமர்சனங்கள் மனதை காயப்படுத்துகின்றன. என் தயாரிப்பாளர்களிடம், ‘இந்த படம் தீபாவளிக்கு வர என்ன தகுதி இருக்கிறது? பெரிய ஹீரோ, பெரிய டைரக்டர் இல்லையே’ என்றெல்லாம் கேட்டு இருக்கிறார்கள்.

ஒரு படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக என்ன தகுதி வேண்டும்? என்று எனக்கு தெரியவில்லை. ஒரு படத்துக்கு நல்ல கதை, நல்ல ஆட்கள் இருந்தால் போதாதா? அந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம். மற்றவை அனைத்தும் ரசிகர்கள் கையில் தான்’ என மனக்குறையுடன் கூறியுள்ளார்.

my film worthy of released for diwali harish kalyans concern
actor harish kalyandiesel moviestoryரசிகர்கள்ஹரீஸ் கல்யாண்