குடும்பத்தை பிரிக்க ராஜாங்கம் போட்ட திட்டம்.. நந்தினிக்கு மருதாணி வைத்துவிடும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு சிங்க பெண்ணே ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது மூன்று முடிச்சு மற்றும் சிங்க பெண்ணே சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.

moondru mudichu singappenne serials today promo update 22-01-26

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி குடும்பத்தினரும் தில்லை குடும்பத்தினரும் வரவில்லை இப்போ என்ன பண்றது என்று யோசிக்க பிரசிடென்ட் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்கார்ந்து பேசுகின்றன. அவங்க வர வரைக்கும் பாத்துகிட்டு இருக்க முடியாது அவங்க வரும்போது கூட வரட்டும் ஆனா அதுக்குள்ள யாருக்காவது ஊர் மரியாதை கொடுக்குறத பத்தி பேசணும் என்று சொல்ல ராஜாங்கத்தின் தம்பி எங்க அண்ணனுக்கு செய்யணும் என்று சொல்லுகிறார். உடனே ராஜாங்கம் தெய்வத்துக்கே கிட்ட கொடுத்து வாங்க வேண்டியது என்கிட்ட செஞ்சு கொடுத்தா அது பெரிய பாவம் என்று ஆக்சன் பண்ணுகிறார். நாங்க உன்கிட்ட பர்மிஷன் கேக்குறதுக்காக கூப்பிடல நீங்க தான் பண்ணனும்னு சொல்றோம் ஊர்ல எல்லாரும் சொல்லிட்டாங்க கட்டுப்பட்டு தான் ஆகணும் என்று சொல்ல, சரி இவ்வளவு சொல்றீங்க கடைசி நிமிஷம் வரைக்கும் நான் காத்துக்கிட்டு இருப்பேன் ஆனால் என்னோட தெய்வங்கள் வந்துச்சுன்னா கண்டிப்பா அவங்க தான் பண்ணனும் என்று சொல்லிவிட அவர்களும் ஒத்துக் கொள்கின்றனர். மறுநாள் காலையில் அருணாச்சலம் அய்யா குடும்பம் தில்லை ராஜன் அய்யா குடும்பமும் திருவிழாவில் கலந்து கொள்ள முடியாததால் பேசியது போல ராஜாகத்திற்கு மரியாதை செய்யப் போகிறோம் என்று சொல்லி பூஜையை ஆரம்பிக்கின்றனர்.

பூஜையை முடித்து செங்கோலை எடுத்து ராஜாங்கத்திடம் கொடுக்க போக, ஒருவர் பதற்றத்துடன் ஓடி வந்து தடுத்து நிறுத்துகிறார். உடனே இரண்டு குடும்பமும் வந்துட்டாங்க என்று சொல்ல அருணாச்சலம் மற்றும் குடும்பத்தினர் வர அவர்களைப் பார்த்து பிரசிடெண்ட் கடுப்பாக மேல தாளத்துடன் அவர்களை வரவேற்கின்றனர். உடனே பிரசிடென்ட் ஆன ராஜாங்கம் உடனே அவர்களிடம் தெய்வம் என சொல்லி காலில் விழுந்து நாடகம் ஆடுகிறார். ஊர் பெரியவர்கள் ஊர் மரியாதையை ராஜாங்கத்திற்கு கொடுக்க முடிவெடுத்த விஷயத்தை சொல்ல இப்ப மட்டும் ஒன்னும் பிரச்சனை இல்ல அவருக்கு கொடுக்கறது இல்ல எங்களுக்கு சந்தோஷம்தான் கொடுங்க என்று சொல்ல ஆனால் ராஜாங்கம் வேண்டாம் என சொல்லுகிறார். நான்தான் நேத்தே கடைசி நிமிஷம் வரைக்கும் காத்துக்கிட்டு இருப்பேன்னு சொன்னேன்ல அதே மாதிரி என்னோட தெய்வங்கள் வந்துட்டாங்க என்று சொல்லிக்கொள்கிறார். உடனே ஊர் பெரியவர்கள் நீங்க மரியாதையை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல அருணாச்சலம் சரி என சொல்லுகிறார். உடனே பூஜை செய்த பிறகு அருணாச்சலம் செங்கோலை வாங்குகிறார். இதனால் கடுப்பான பிரசிடெண்ட் மனைவி திட்டிவிட்டு சென்று விடுகிறார்.

அங்கிருந்து ஊர்வலமாக வந்து கோவிலில் வந்து அம்மன் பக்கத்தில் வைக்கின்றனர். அருணாச்சலம் ஐயாவிற்கு பரிவட்டம் கட்டிடலாமா என்று கேட்க சூர்யா ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டு இதுக்கு முன்னாடி பரிவட்டம் யாருக்கு கட்டுவீங்க என்று கேட்க அருணாச்சலம் நான் ஒருவாட்டி பரிவட்டம் கட்டினால் தில்லை ஒருவாட்டி செங்கோல் எடுப்பாரு நான் செம்கோல் எடுத்தா எனக்கு பரிவட்டம் கட்டுவாங்க என்று சொல்ல அப்போ இந்த வாட்டி எதுக்கு ரெண்டு மரியாதையும் நம்ம குடும்பத்துக்கு மட்டும் என்று சொல்ல, கோவில் தரப்பினர் பெண்களுக்கு பரிவட்டம் கட்டக்கூடாது என்று சொன்ன அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது என்று சொல்ல அருணாச்சலமும் சுந்தரவள்ளியும் பரிவட்டத்தை ஏத்துக்க சொல்ல சுந்தர வல்லியே பார்வதிக்கு மாலை மரியாதை செலுத்தி பரிவட்டம் போடுகிறார். உடனே ராஜாங்கமும் அவரது மனைவியும் இவங்க இரண்டு குடும்பமும் ஒண்ணா இருக்குற வரைக்கும் ஒன்னும் பண்ண முடியாது முதல்ல இவங்களை பிரிக்கணும் என்று சொல்லுகிறார். வழக்கம்போல இதுக்கப்புறம் நடக்குற பூஜை கபடி போட்டி என்று எல்லாமே நடக்க போகுது எல்லாத்துக்கும் நீங்க ஒத்துழைப்பு கொடுக்கணும் என்று சொல்ல, சந்தோஷமா பண்ணிடலாம் என்று அருணாச்சலம் செல்லுகிறார்.

வழக்கமா செய்ற மந்திரமூர்த்தி அம்மன் வாகனத்தை செய்வதற்கு இல்லை என்று சொல்ல இப்போதைக்கு பூஜையை ஆரம்பிப்போம் அப்புறம் பாத்துக்கலாம் என்று சொல்ல, நந்தினி நான் விரதம் இருந்து சிலை செய்கிறேன் என சொல்ல, அப்போது கோவில் பூசாரி மண்ணை எடுத்து பார்வதியிடம் கொடுக்க பார்வதி அதை நந்தினி இடம் கொடுக்கிறார். அன்பு ஆனந்தியுடன் நந்தினி வண்டி ஓட்டுறாங்க சிலை செய்றாங்க என்று சொல்ல எங்க கிராமத்து பொண்ணுங்க எல்லாம் அப்படித்தான் என்று சொல்லிவிட்டு அனைவரும் கிளம்ப அந்த நேரம் பார்த்து சூர்யா பூசாரியிடம் அன்பு ஆனந்திக்கு தாலி மாற்றிக் கொள்ளும் விஷயத்தைப் பற்றி கேட்க நல்ல நாளும் நல்ல நேரமும் பார்த்து சொல்றேன் சிறப்பா பண்ணிடலாம் என்று சொன்ன அனைவரும் கிளம்பி விடுகின்றனர். மறுபக்கம் ராஜாங்கம் உட்கார்ந்து கொண்டிருக்க அவரது மனைவி வந்து அசிங்கப்படுத்தி பேச, நான் என்ன பண்ணிக்கிட்டு இருந்தேன் என்று நீ பார்த்துக்கிட்டு தானே இருந்தேன் எதுவா இருந்தாலும் நிதானமாதான் செய்யணும் என்று சொல்லுகிறார். நீ அனுப்புன ஆளுங்கள அடிச்சது அந்த நந்தினியும், ஆனந்தி தான் நீ அது மாதிரி ஆள தான் அனுப்பி இருக்க என்று கோவப்பட, இப்போ வரைக்கும் அருணாச்சலம் தில்லை ராஜனும் சொல்றது தான் நடக்குது என்று சொல்லுகின்றனர். முதல்ல அவங்க குடும்பத்தை உடைக்கணும் என்று திட்டம் போடுகின்றனர்.

இந்த வாட்டி வழக்கம் போல அம்மன் கழுத்துல இருக்குற முத்து மாலை சுந்தரவல்லிக்கு போகக்கூடாது பார்வதிக்கு வரணும்னு ஆசை இருக்கணும் ஆனா சுந்தர வள்ளியும் கொடுக்க கூடாது இதை நம்ப செஞ்ச ஆகணும் நீ வெத்தலை எடுத்துட்டு வாங்க போ நான் ஒரு லால்
வெத்தலை எடுத்துட்டு போறேன் என்று சொல்லி முடிவெடுக்கின்றனர்.

ஆனந்தி நந்தினியுடன் கிராமத்து வாழ்க்கையைப் பற்றி பேச, இதையெல்லாம் மிஸ் பண்ணி நீங்க இங்க வந்து வேலை செய்றீங்க என்று சொல்ல உடனே ஆனந்தி நீங்க மட்டும் என்ன உங்க ஊர் என்ன என்று கேட்க இங்கேதான் பக்கத்து ஊரு சுந்தரவல்லி அம்மாவோட ஊர் தான் எங்க ஊரு சூர்யா சார் என் கழுத்துல தாலி கட்டுறதுக்கு முன்னாடி வரைக்கும் சுந்தரவல்லி அம்மாவுக்கு என்னை பிடிக்கும் என்று சொல்லி நடந்த விஷயங்களை ஆனந்தியிடம் சொல்லுகிறார். பேசி வைத்தது போல் பார்வதியிடம் ராஜாங்கம் வெத்தலையை கொடுக்க, ராஜாங்கத்தின் மனைவி சுந்தரவல்லி இடம் சென்று வெத்தலை கொடுத்து பார்வதி அம்மா முத்துமாலை வாங்க ஆசைப்படுற மாதிரி தெரியுது என்று சொல்லுகிறார். ராஜாங்கம் பார்வதி இடம் இந்த வாட்டி முத்துமாலை நீங்க வாங்குங்க என்று சொன்ன அது வழக்கமா சுந்தரவல்லி தானே வாங்குவாங்க என்று சொல்ல மகேஷ் தம்பி கல்யாணத்துக்குன்னு சொன்னா அவங்க என்ன கொடுக்காமயா போய்ட போறாங்க என்று சொல்ல உடனே பார்வதி யோசிக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் திருவிழாவில் மருதாணி வைக்க நந்தினி சூர்யா மற்றும் ஆனந்தி அன்பு நால்வரும் மருதாணி கடையின் முன் நின்று உனக்கு என்ன புடிச்சிருக்கு எடுத்துக்கோ என்று சூர்யா நந்தினி இடம் சொல்லுகிறார். உடனே நந்தினி நீங்களே பார்த்து சொல்லுங்க என்று சொல்ல ஆனந்தியும் அன்புவிடம் நீங்களே சொல்லுங்க என சொல்லுகிறார்.

ராஜாங்கத்தின் மனைவி ஒரு பக்கம் சுந்தரவல்லி இடம் வருஷம் முழுக்க ஆத்தா கழுத்தில் இருக்கிற முத்துமாலை என்று பேச மறுப்பக்கம் ராஜாங்கம் பார்வதி இடம் ஆத்தா கழுத்துல இருக்குற முத்துமாலை பெரிய குடும்பத்துக்கு தானே என்று சொல்ல சுந்தரவல்லி ராஜாங்கம் மனைவியிடம் இந்த வருஷமும் முத்துமாலையை நான் தான் வாங்கலாம் என்று இருக்கேன் சொல்லுகிறார். உடனே சூர்யா நந்தினிக்கும் அன்பு ஆனந்திக்கும் கையில் மருதாணி வைக்க மித்ரா இது மாதிரி ஒரு வாய்ப்பு மிஸ் பண்ணிட்டியே என்று புலம்புகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu singappenne serials today promo update 22-01-26
anbuArunachalamMoondru Mudichumoondru mudichu singappenne serials today promo update 22-01-26nandhinipromorajangamsingappenne serialsundravalliSunTvsuryatodayஅன்புஆனந்திசிங்க பெண்ணேசுந்தரவல்லிசூர்யாநந்தினிமித்ராமூன்று முடிச்சுராஜாங்கம்