தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் டெல்லி நந்தினியை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு விஜியை அனுப்பி பணம் எடுத்துட்டு வர சொல்ல விஜியும் வேறு வழி இல்லாமல் செல்கிறார். அருணாச்சலம் சூர்யாவிடம் என்ன யோசிச்சுக்கிட்டு இருக்க என்று கேட்க நந்தினி நல்லா சமைப்பா அப்புறம் எப்படி தப்பு நடந்திருக்க முடியும் என்று கேட்க, அதற்கு அருணாச்சலம் ஏதாவது தப்பா முடிவெடுத்து இருக்கலாம் என்று பேசிக்கொண்டு இருக்க பரபரப்பாக விஜி ஓடி வந்து சூர்யாவிடம் டெல்லி நந்தினியை பிடித்து வைத்திருக்கும் விஷயத்தை சொல்ல சூரியா கோபப்பட்டு கிளம்பப் போக அருணாச்சலம் பொறுமையாக முடிவெடு என்று சொல்லுகிறார். அவன் கிட்ட இருக்கிறது நம்ம வீட்டு பொண்ணு, பிரச்சனை வரதுக்கு முன்னாடி பணத்தை திருப்பி கொடுத்துட்டு முதல்ல நந்தினி கூட்டிட்டு வா அப்புறம் பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு அருணாச்சலம் பணத்தை கொடுக்கிறார்.
இருவரும் பணத்தை எடுத்துக் கொண்டு காரில் கிளம்ப நந்தினி மறுபக்கம் டெல்லி இடம் கெஞ்ச, அவரது அடியால் உள்ள போய் பாத்திரத்தை கழுவிவை என்று நந்தினியை அதட்ட உடனே டெல்லி, அவரைக் கூப்பிட்டு அறைந்து பணம் வேணும்னு போனவ ஒரு வாரத்துக்கு திரும்பி வரமாட்டா ஒரு வாரத்துக்கு இவதா உங்களோட அண்ணி அடுத்த ஒரு வாரத்துக்கு இவதான் என்னோட மகாராணி என்று சொல்ல என்னென்னமோ சொல்றீங்க உங்கள நம்பி தானே வந்தோம் என்று சொல்லுகிறார். நீ அவ்வளவு அழகா இருக்க நீ பணம் தர வேண்டாம் ஒரு வாரம் மட்டும் நீ என் வீட்ல இரு என்று சொல்லி விட்டு, இந்த வாய்ப்பு வேற யாருக்கும் கிடைக்காது புரிஞ்சிக்க என்று சொல்லிவிட்டு தனி ரூமில் அடைக்க சொல்லுகின்றனர். பிறகு ரூமில் நந்தினி டெல்லி பேசியதை நினைத்து கண்கலங்க, சூர்யா விஜியுடன் காரில் பணத்துடன் வந்து இறங்குகிறார்.
இவர்களை நந்தினி ஜன்னல் வழியாக பார்க்கிறார். நீதான் டில்லியா என்று கேட்க நீ யாருடா என்று கேட்க சூர்யா டா பணத்தை புடியென தூக்கி போட பணத்தை வாங்கிய டெல்லி அவ உனக்கு என்ன உறவு வேணும் பிரண்டா லவ்வரா என்று கேட்க சூர்யா நந்தினி வர சொல்லுன்னு சொன்னேன் என்று அழுத்தமாக சொல்லுகிறார். நந்தினிக்கு நீ என்னடா வேணும் என்று கேட்க, விஜி அவர் நந்தினியோட என்று ஆரம்பிக்க, நான் நந்தினிக்கு என்னவா இருந்தா என்ன நந்தினி வர சொல்லு என்று சொல்லுகிறார். உடனே டெல்லி நீ என்ன அவளோட பாய் பெஸ்ட்டியா என்று கேட்க என்ன இருந்தா உனக்கு என்னடா என்று சொல்லி டெல்லி மற்றும் அவர்களது ஆட்களை சூர்யா அடிக்க விஜி உள்ளே சென்று நந்தினி தேடுகிறார். விஜி நந்தினியை கண்டுபிடித்த ஆறுதல் சொல்லி அழைத்துச் செல்ல, சூர்யா டெல்லியை அடி வெளுத்து வாங்குகிறார். பிறகு அவர்கள் வீட்டில் இருக்கும் பெண்களிடம் இவன்கிட்ட வாங்கின காசுக்கு நீங்க வேலை செஞ்சது கழிஞ்சி போச்சு இதுக்கு மேல இவனுக்கு காசு கொடுக்காதீங்க என்று சொல்லிவிட்டு அவர்களை இங்கிருந்து போகச் சொல்லுகிறார்.
இங்க இருக்கிற பொண்ணுங்கள அடச்சு வச்சு அவங்க சமைச்சு கொடுக்கிற சாப்பாட்ட சாப்பிட்டா உனக்கு எப்படி தான் செரிமானம் ஆகுது. ஒழுங்கா திருந்த பாரு இல்லன்னா இப்ப அடிச்ச மாதிரி அடிக்க மாட்டேன் கொன்னுடுவேன் என மிரட்டி அங்கிருக்கும் பெண்களை அனுப்பி விட்டு நந்தினியை அழைத்துச் செல்கிறார். அந்தப் பெண்கள் சூர்யாவிற்கு நன்றி சொல்லி சொல்லி அங்கிருந்து கிளம்ப சூர்யா விஜி வீட்டிற்கு வருகின்றனர். பிறகு வீட்டில் வந்து இறங்கியவுடன் அவன் கிட்ட வட்டி வாங்குற ஐடியாவை யார் கொடுத்தது என்று கேட்க நந்தினி விஜி அக்கா தான் என்று சொல்லுகிறார். நந்தினி ஓட அவசரத்துக்காக தான் அங்க வாங்குற மாதிரி ஆயிடுச்சு என்னாச்சு அண்ணா என்று கேட்கிறார்.
விஜியிடம் சூர்யா இனிமே யாரு என்னன்னு தெரியாம காசு வாங்காதீங்க சும்மா ரெண்டு பேர் கிட்ட விசாரிச்சாலே அவன் எப்படிப்பட்டவன் என்று சொல்கிறார்கள் நீங்க எப்படி அவகிட்ட மாட்டீங்கன்னு தெரியல என்று சொல்லிவிட்டு சரி ஓகே இதுக்கு மேல உஷாரா இருங்க என்று சொல்லிவிட்டு நாங்க கிளம்பட்டுமா என்று சொல்ல மேல வந்துட்டு போங்க என்று சொல்லுகிறார் விவேக் இருக்கானா என்று சூர்யா கேட்க அவர் இல்ல என்று சொல்ல உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்லி விஜி மேல கூப்பிடுகிறார். பிறகு மூவரும் உள்ள வந்தவுடன் என்ன பேசணும் விஜி சொல்லு என்று கேட்க, நந்தினி கடன் வாங்கி இருந்தா பிரச்சனையாயிடுச்சு அதை பணத்தை கொடுத்து சரி பண்ணிட்டீங்க சரி ஆனா அந்த பணத்தை கொடுக்கப் போகும்போது அந்த டெல்லி நந்தினிக்கு நீங்க என்ன வேணும்னு மூணு நாலு வாட்டி கேட்டான் ஆனா நீங்க ஏன் பதில் சொல்லல நந்தினி அனுப்பு நந்தினி அனுப்புனதா சொல்லிக்கிட்டு இருந்தீங்க நந்தினி யாருன்னு கேட்டா நீங்க தொட்டு தாலி கட்டின பொண்டாட்டின்னு சொல்றதுக்கு உங்களை எது தடுக்குது ஏன் சொல்லலை என்று கேட்க சூர்யா அமைதியாக இருக்கிறார். நந்தினியை பொண்டாட்டின்னு சொல்ல உங்களுக்கு வெக்கமா இருக்கா கிராமத்தில் இருந்து வந்தவளை எப்படி வைஃப்ன்னு சொல்லணும்னு நினைக்கிறீங்களா அது இல்லாம உங்க அம்மா எல்லாம் நினைக்கிற மாதிரி உங்க ரேஞ்சுக்காகவ ஈக்குவல் இல்லன்னு நினைக்கிறீங்களா என்று கேட்க என்ன விஜி என்று சூர்யா அதிர்ச்சி ஆகி கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் ஒரு பக்கம் உங்க அம்மா ஒரு பக்கம் உங்க அக்கா தங்கச்சி சேர்ந்து இவள வாட்டி வதைத்து கிட்டு இருக்காங்க நீங்களும் கண்டுக்காம போயிட்டீங்கன்னா எதுக்கு இவ உங்க வீட்ல இருக்கணும் என்று கேட்கிறார். மறுபக்கம் நந்தினி சுந்தரவல்லி இடம் நிஜமாகவே உங்க யார் பெயரையும் நான் சொல்லல விஜி அக்கா சொல்லி தான் நான் போனேன் வேணும்னா அவங்களுக்கு போன் பண்ணி கேட்டு பாருங்க என்று சொல்லுகிறார்.
அதற்கு சுந்தரவல்லி மானம் ரோசம் ஏதாவது இருந்ததுனா நீ கொஞ்ச நேரம் கூட இந்த வீட்ல இருக்கக்கூடாது என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.