நந்தினிக்கு வரும் பொசசிவ்னஸ்.. சூர்யா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 01-10-25

நேற்றைய எபிசோடில் நம்ம வீட்ல நடக்கிற பிரச்சனை ஏற்கனவே கம்பெனில கொஞ்சம் தெரிஞ்சிருக்கு இப்போ நம்ம விட்டுட்டு போனா அது ஒரு பேச்சு வரும் இதெல்லாம் தேவையா என்று கேட்கிறார். அஞ்சு நிமிஷம் உட்காருங்கள் போயிடலாம் என்று சொல்லி உட்கார வைக்கிறார். மறுபக்கம் ரூமில் நந்தினி சூர்யாவிடம் மெஷினை மாதவி அம்மாவை ஆன் பண்ணி வைக்கட்டும் என்று சொல்ல சூர்யா அதெல்லாம் வேண்டாம் என சொல்லுகிறார். திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்காத இந்த விஷயத்தில் நான் சொல்றதை கேளு என்று சொல்ல, நந்தினி நெலிந்து கொண்டு இருக்க என்ன ஆச்சு என்று கேட்க சாரி காண்பிக்க நந்தினிக்கு சூர்யா பின் பண்ணி விடுகிறார். மறுபக்கம் அசோகன் ஒயர்களை மாற்றி கனெக்சன் கொடுக்க எடுக்க அந்த நேரம் பார்த்து மாதவி போன் போட்டு நல்லபடியா விஷயத்தை முடிச்சிட்டீங்களா என்று பேச அதுதான் பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று போனில் பேசிக்கொண்டே கனெக்ஷனை மாற்றிக் கொடுக்க மாதவியும் சந்தோஷமாக போனை வைக்கிறார்.

சுந்தரவல்லி சுரேகாவை தலையணை எடுத்துக் கொண்டு வந்து சோபாவில் வைத்து தலை சாய்க்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ண சொன்னா இப்படியா என்று கேட்கிறார். உடனே நந்தினி சூர்யா வரும் சத்தம் கேட்டு இவளுக்கு ரொம்ப திமிருமா சூர்யா தான் சொல்றான்னா இவ சொல்றதுக்கு புத்தி எங்க போச்சு நான் வேலைக்காரி மாதவி அம்மா தான் ஆன் பண்ணனும்னு இவதான சொல்லணும் என்று சொல்லுகிறார். எனக்கென்னமோ அவ இப்பதான் லைட்டா ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறாள் என்று தோணுது என்று சொல்லுகிறார். கடைசியா சூரியாவை கைக்குள்ள போட்டுக்கிட்டு இந்த சொத்தை எல்லாம் எழுதி வாங்கிக்கின்னு போயிட்டே இருக்க போறா என்று சொல்ல உங்களுக்கெல்லாம் வேற எதுவுமே தோணாதா என்று அருணாச்சலம் கோபப்படுகிறார் அவன் வரும்போது எதுவும் பிரச்சினை பண்ணாதீங்க என்று சொல்ல சூர்யாவும் நந்தினியும் வருகின்றனர். அதான் மகாராணி வந்துட்டாளா வாங்க என்று எல்லாரும் கிளம்புகின்றனர். பிறகு அனைவரும் கம்பெனிக்கு வந்து இறங்கி உள்ளே போக மாதவி மற்றும் அசோகனை தேடுகிறார்.

உடனே அசோகனும் வந்து எல்லாம் பெர்ஃபெக்ட்டா முடிஞ்சது மாதவி என்று சொல்ல சரி வாங்க என அழைத்து வருகிறார். பிறகு ஒவ்வொருவராக குத்து விளக்கு ஏற்றி பூஜையை ஆரம்பித்து வைக்கின்றனர். பிறகு தீபாதாரனை காட்டி விட்டு பூசணிக்காய் சுத்தி உடைக்கின்றனர். சூர்யா வேலை ஆட்கள் உடன் சேர்ந்து ஒரு சூப்பரான டான்ஸ் ஆடுகிறார். பிறகு நந்தினியும் இழுத்து விட அவரும் கொஞ்ச நேரம் ஆடிவிட்டு சென்று விடுகிறார். சூர்யா டான்ஸ் ஆடி முடித்த பிறகு எல்லோருக்கும் கிப்ட் கொடுக்கின்றனர். கிப்ட் கொடுத்து முடித்த பிறகு சுந்தரவல்லி இந்த கம்பெனியோட வளர்ச்சிக்கு முழுக்க முழுக்க காரணம் இந்த சுந்தரவல்லி தான் என சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் கம்பெனியில் வேலை செய்யும் பெண் நான் சூர்யா சார் பக்கத்துல நின்னா உங்களுக்கு ஏன் கோவம் வருது என்று கேட்க எந்த உரிமையில்லைன்னு கேட்டல்ல இந்த உரிமைதான் என தாலி எடுத்துக்காட்டுகிறார். உடனே சூர்யா என்ன நந்தினி பொசசிவா பேசிக்கிட்டு இருக்க இப்படியெல்லாம் நீ பேச மாட்டியே என்று சொல்லுகிறார் மறுபக்கம் சுந்தரவல்லி மாதவி இடம் மெஷினை போய் நீ ஆன் பண்ணு என்று சொல்ல ஷாக் அடிக்கும் என்று அசோகன் உளற ஷாக்கா என சுந்தரவல்லி கேட்கிறார். நந்தினி மெஷினை அமுக்க போக யாருக்கு என்ன நடக்கிறது என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 01-10-25
madhaviMoondru Mudichumoondru mudichu serial today promo update 01-10-25nandhinipromoserialsundravalliSunTvsuryatodayஅசோகன்சுந்தரவல்லிசூர்யாநந்தினிமாதவிமூன்று முடிச்சு