விஜய் நடித்த ‘மெர்சல்’ ரீரிலீஸ் பற்றிப் பார்ப்போம்..
தரணி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘கில்லி’ படம், கடந்த ஆண்டு ரீ ரிலீஸாகி ரசிகர்களைக் கவர்ந்தது. அதேபோல், இந்த ஆண்டு சச்சின் படத்தையும் ரீ ரிலீஸ் செய்து கவர்ந்தது.
இந்நிலையில், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் ரீ ரிலீஸாகிறது. இதனால் தளபதி ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். 2017 ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தில், விஜய் 3 வேடங்களில் நடித்திருந்தார். வெற்றிமாறன், வெற்றி, டாக்டர் மாறன் ஆகிய கதாபாத்திரங்களில் வந்து ரசிகர்களை ஈர்த்தார்.
இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சத்யராஜ், வடிவேலு, ஹரீஷ் பேரடி, காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா, கோவை சரளா, சத்யன், ராஜேந்திரன், காளி வெங்கட், தேவதர்ஷினி, சுரேகா வாணி, மிஷா கோஷல், சிவகுமார், பாண்டியன், தவசி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், விஜய்யின் பிறந்த நாள் வருகிற ஜூன் 22-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதை முன்னிட்டு ‘மெர்சல்’ படம் வருகிற ஜூன் 20-ந்தேதி ரீ ரிலீஸாகிறது. கேரளா மற்றும் கர்நாடகாவிலும் ரீ-ரிலீஸாகிறது. அந்த மாநிலங்களில் ஜூன் 13-ந்தேதி ரீ-ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில், ஹெச்.வினோத் இயக்கத்தில், அரசியல் பேசும் படமாக உருவாகும் ‘ஜனநாயகன்’ ஷுட் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அனிருத் இசையில் அரசியல் முழக்கமிடும் பாடல்கள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா உள்பட பலர் நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகும் இப்படம் ‘பகவந்த் கேசரி’ என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக் அல்ல என படக்குழு தெரிவித்துள்ளது.