நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் திரையில் ஜோடியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாக சைதன்யாவும், சமந்தாவும் மீண்டும் இணைவார்களா என்ற கேள்வி டோலிவுட்டில் பரவி வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘யே மாய சேசாவே’ படத்தின் மறுவெளியீடுதான் இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம். ஜூலை 18 அன்று இந்தக் காதல் கிளாசிக் படம் மறுவெளியீடு செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
- Advertisement -
நாக சைதன்யாவும் சமந்தாவும் இணைந்து நடித்த இந்தப் படம், தமிழில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். கௌதம் மேனன் இயக்கத்தில் 2010 இல் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஏ.ஆர். ரஹ்மானின் இசையும், கார்த்திக்-ஜெஸ்ஸி கதாபாத்திரங்களின் காதலும் ரசிகர்களைக் கவர்ந்தன. இந்த மறுவெளியீட்டு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2021 இல் பிரிந்த இருவரும் இந்தப் படத்தின் விளம்பரத்துக்காக ஒன்றாகத் தோன்றுவார்களா என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது ‘யே மாய சேசாவே’ மறுவெளியீடு குறித்த விவாதங்கள் பரபரப்பாக நடந்து வருகின்றன.