கேமியோ கலாச்சாரத்தை பின்பற்றுவதில்லை: ‘கூலி’ படம் பற்றி லோகேஷ் பகிர்வு..

சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ பட ஷுட்டிங் முடிவடைந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் படம் குறித்தும் அமீர்கான் கதாபாத்திரம் பற்றியும் விளக்கியுள்ளார். அவர் தெரிவிக்கையில்,

‘படத்தில் அமீர்கான் கதாபாத்திரம் நீட்டிக்கப்பட்ட கேமியோவாக இருக்கும்.படம் முழுவதுமே அமீர்கானின் ரோலை ஆடியன்ஸ் உணர்வார்கள். இப்படம் வெறும் கேமியோ நடிகர்களால் மட்டுமே உருவாக்கப்பட்டது கிடையாது. நான் கேமியோ கலாச்சாரத்தை பின்பற்றுவதும் இல்லை. ஆரம்பம் முதல் இறுதிவரை அனைவரும் சரியான கதாபாத்திரத்தில் இருப்பார்கள். இவையெல்லாம் மக்களுக்கு பிடித்திருந்தால், கண்டிப்பாக ‘கூலி’ பிளாக் பஸ்டராக இருக்கும்.

இப்படத்துக்காக 45 நாட்கள் இரவு நேர படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பங்கேற்றார். அதிகாலை நான்கு மணிவரை ஷுட்டிங் நடந்தது. அதுவும் ஆக்சன் காட்சிகளில் நடித்தார். படப்பிடிப்பு தளத்தில் அனைவருடனும் எளிமையாக பழகினார். ஜாலியாக பேசினார். ரஜினி சாரை ரொம்ப மிஸ் பண்ணுகிறோம்’ என லோகேஷ் பேசியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தனது எல்சியூவில் இல்லாமல் தனிக்கதையாக ‘கூலி’ படத்தை இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. படத்தில் சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா, சவுபின் சாகீர், ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இதனிடையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் 10 வினாடிகள் மட்டுமே உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரலானது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுடன், ரஜினி திரைத்துறையில் நுழைந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாகவும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றினை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த திருவிழா நாளுக்காக ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

lokesh kanagaraj talking aamir khan role in coolie movie
coolie moviedirector lokesh kanagarajRajinikanthஅமீர்கான்ரஜினிகாந்த்