கூலி படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட லோகேஷ் கனகராஜ்..!

கூலி படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

lokesh kanagaraj about coolie movie

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உள்ள சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்தில் சத்யராஜ் ஸ்ருதிஹாசன் உபேந்திரா நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படம் குறித்து கேட்ட கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் பதில் கொடுத்துள்ளார் அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களில் பழைய படங்களின் காட்சியை வைப்பது வழக்கம் அந்த வகையில் கூலி படத்தில் இருந்து பழைய படங்களின் காட்சி இருக்கிறதா என்று கேட்க அதற்கு அவர் எந்த ஒரு பழைய காட்சியையும் நாங்கள் ரீ கிரியேட் செய்யவில்லை. ஆனால் அவருடைய பழைய ஸ்டைலை கூலி படத்தில் வைத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

lokesh kanagaraj about coolie movie
aboutcoolie movieLokesh Kanagarajlokesh kanagaraj about coolie movieஉபேந்திராகூலிசத்யராஜ்நாகார்ஜுனாலோகேஷ் கனகராஜ்ஸ்ருதிஹாசன்