நெஞ்சை பதற வைக்கும் கரூர் சம்பவம் குறித்து பிரபலங்கள் பதிவு வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே இரண்டு மாநாடுகள் முடிந்த நிலையில் தற்போது மாவட்டம் வாரியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார் நாமக்கலில் முடித்துவிட்டு கரூரில் பிரச்சாரத்தை விஜய் தொடங்கியிருந்தார் இவரை காண பல்லாயிரம் கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசலில் சிக்கி 39 பேர் ப*யாகி இருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் 10 குழந்தைகளும் 16 பெண்களும் என தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பிரபலங்கள் பலரும் அவர்களது இரங்கலை தெரிவித்து வருகின்றன.