கங்குவா படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
- Advertisement -
சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கருணாஸ், நட்டி நடராஜன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
நவம்பர் 14ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர்.ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம். உலகளவில் இந்த திரைப்படம் 12 நாட்களில் 109 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் எதிர்பார்ப்பு என்னவோ ஆயிரம் கோடியை தாண்டும் என எதிர்பார்த்தது குறிப்பிடத்தக்கது.