சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி, ஜெயிலர் 2 என இரண்டு படங்கள் தயாராகி வருகின்றன. இதில் லோகேஷ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் வருகிற ஆகஸ்ட் 14-ந்தேதி திரைக்கு வரவுள்ளது. நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
அதேபோல் கமல்ஹாசனும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-3, கல்கி-2, விக்ரம்-2, படத்திலும் நடிக்க உள்ளார்.மேலும், ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு இயக்கும் படத்தை தயாரித்து ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக வரும் 25-ந்தேதி கமல்ஹாசன் பதவியேற்க உள்ளதாக மக்கள் நீதி மய்யம் நேற்று அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில்,
‘மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
கமல்ஹாசன், வருகிற 25-ம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்’.என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று கம்ல்ஹாசன், ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று சந்தித்தார். அப்போது, நாடாளுமன்ற உறுப்பினராக வரும் 25-ந்தேதி பதவியேற்க உள்ளதை முன்னிட்டு வாழ்த்து பெற்றார். இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்’. என குறிப்பிட்டுள்ளார்.