தீபிகா படுகோன் இல்லன்னா ஆலியாபட்: ‘கல்கி’ படக்குழு திட்டம்..

பாலிவுட்டில் கல்கி-2 படத்தின் தகவல்கள் காண்போம்..

அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி உள்பட பலர் நடித்த படம், ‘கல்கி 2898 ஏடி’. கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார். நாக் அஸ்வின் இயக்கியிருந்த இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்தது.

இப்படத்தின் 2-ம் பாகம் படப்பிடிப்பு விரைவில் தொடங்கயிருந்த நிலையில், படத்தில் சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோன் நீக்கப்பட்டார். இதைத் தயாரிப்புத் தரப்பு அறிவித்திருந்தது.

8 மணி நேரப் பணி, 25 சதவீத சம்பள உயர்வு, அவருடைய குழுவினருக்கான தங்குமிடம் ஆகியவற்றில் தயாரிப்பு தரப்புக்கும் தீபிகா படுகோனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

அவர் இடத்தில் வேறு யார் நடிக்க இருக்கிறார்கள் என்பதைப் படக்குழு அறிவிக்கவில்லை. இந்நிலையில், அந்த கதாபாத்திரத்தில் இந்தி நடிகை ஆலியா பட் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை.

kalki 2898 ad alia bhatt to act in deepika padukone role
actress alia bhattactress deepika padukonekalki 2898 movie adஅமிதாப்பச்சன்கமல்ஹாசன்