ஜான்விகபூர் நடித்த காதல் திரைப்படம், ஓடிடி.யில் ரிலீஸ்..

திரையரங்குகளில் வரவேற்பு பெறாத சில படங்கள், ஒடிடி.யில் வெளியாகி வரவேற்பு பெறுவதுண்டு. அந்த நிலையில் நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது ஜான்வி நடித்துள்ள படம்.

வருண் தவான், ஜான்வி கபூர் நடிப்பில், காதலுடன் நகைச்சுவையும் கலந்து வெளியான படம் ‘சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி’. இப்படத்தை பத்ரிநாத், கி துல்ஹானியா, தடக் ஆகிய இயக்கிய ஷஷாங்க் கைதன் இயக்கியுள்ளார்.

இப்படம் வசூல் ரீதியாகவும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில், இப்படம் ஓடிடியில் வெளியாகும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

அவ்வகையில், சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி வருகிற 27-ந்தேதி முதல் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் சன்யா மல்ஹோத்ரா மற்றும் ரோஹித் சரப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் மணீஷ்பால், அக்‌ஷய் ஓபராய், அபினவ் சர்மா ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் மென்டர் டிசைபிள் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் கரண் ஜோஹர் மற்றும் ஷஷாங்க் இணைந்து தயாரித்துள்ளனர்.

janhvi kapoor sunny sanskari ki tulsi kumari movie ott release
actress janhvi kapoorLove Storysanskari ki tulsi kumari movieவருண் தவான்ஜான்விகபூர்