‘ஜனநாயகன்’ படம் குறித்து, தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தெரிவித்துள்ள தகவல் காண்போம்..
தளபதி விஜய் தனது 51-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். அவரது கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பட போஸ்டரும் வெளியிடப்பட்டு, ரசிகர்கள் குஷியாகினர்.
மேலும், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் விதமாக ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் ரோர் வீடியோ வெளியாகியுள்ளது. அதோடு, முதல் போஸ்டரும் வெளியிடப்பட்டு உஉள்ளது. அதில், விஜய் சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு கையில் வாள் உடன் உள்ளார்.
இதே போன்று வெளியிடப்பட்ட வீடியோவின் தொடக்கத்தில் ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்று விஜய் பேசும் டயலாக் உடன் தொடங்கி ‘உண்மையான தலைவன் உருவாவது பதவிக்காக அல்ல, மக்களுக்காக’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.
விஜய் போலீஸ் கெட்டப்பில் என்ரி கொடுப்பது போன்று வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. மேலும், அந்த வீடியோவில் கையில் வாள் வைத்துக் கொண்டு மீசையை தொடுவது போன்றும் காட்டப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தில் விஜய் பற்றி கூறியிருப்பதாவது: தளபதி விஜய்யின் கடைசிப் படமான ஜன நாயகன் தி ஃபர்ஸ்ட் ரோர் டீசரானது ஜூன் 22 அன்று அதாவது 51ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இதுவரையில் 68 படங்களில் நடித்து விஜய்யின் 30 வருட சினிமா வாழ்க்கையிலிருந்து ஃபோர்ப்ஸ் 2024 அறிக்கையின் படி விஜய்யின் நிகர சொத்து மதிப்பு 50 மில்லியன் டாலர் ஆகும்.
சினிமாவை விட்டு விட்டு அவர் அரசியலுக்கு வந்தது எம்ஜி ராமசந்திரன் போன்ற நடிகர்கள் அரசியல் தலைவர்களாக மாறிய தமிழக தலைவர்களின் வருகையால் ஈர்க்கப்பட்ட ஒரு சிறந்த நகர்வை எடுத்துக் காட்டுகிறது.
விஜய் சிம்மாசனத்தில் வாளை ஏந்தியிருப்பது போன்ற டீசரின் காட்சிகள் விஜய்யின் அரசியல் பயணத்தை குறிப்பதாக தெரிகிறது. மேலும், இது மெர்சல் 2017 மற்றும் லியோ 2023 போன்ற பிளாக்பஸ்டர் படங்களை அடிப்படையாக வைத்து போஸ்டர் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இது அரசியல் உள்நோக்கங்களுடன் ஆக்ஷனைக் கலக்கும் ஒரு கதையைக் குறிக்கிறது. இது சிறந்த பொழுதுபோக்கு படம் என்பதையும் தாண்டி, கலாச்சார மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை இந்தப் படம் அடிக்கோடிட்டு காட்டுவதாக அமைகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.