மகேஷ் ராஜேந்திரன் எழுதி, இயக்கி, தினேஷ் ராஜ் தயாரித்துள்ள ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தை Zinema Media & Entertainment பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பி.ஜி. முத்தையா பணியாற்றியுள்ளார். இசையமைப்பில் Wayne Pavey, Pradeep PJ, FOXn ஆகியோர் இணைந்துள்ளனர். எடிட்டராக என்.பி. ஸ்ரீகாந்த் பணியாற்றியுள்ளார். சண்டைக் காட்சிகளை அபிஷேக் ஸ்ரீனிவாஸ் வடிவமைத்துள்ளார்.
பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் நடிகர் பவிஷ் பேசும்போது உணர்ச்சி பொங்க கூறியதாவது:
“எந்த மேடையாக இருந்தாலும், எங்கு சென்றாலும் நான் முதலில் நன்றி சொல்லுவது தனுஷ் சாருக்குத்தான். இந்த வாய்ப்புக்கும், ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி” என்றார்.
தயாரிப்பாளர் தினேஷ் பேசும்போது, படம் உருவாக 2½ ஆண்டுகள் உழைத்ததாகவும், சரியான நாயகனை தேடியபோது பவிஷ் கிடைத்ததாகவும் தெரிவித்தார். படம் குடும்பத்தோடு தொடர்புடைய கதையுடன் நகைச்சுவையும் கருத்தும் கலந்ததாக இருக்கும் என்றார்.
தயாரிப்பாளர் தாணு பேசும்போது, குறைந்த செலவில் நல்ல படைப்பை உருவாக்கிய முயற்சியை பாராட்டினார்.
விழாவில் ஆர்.வி. உதயகுமார், ஆர்.கே. செல்வமணி, சசி, ரவி மரியா, சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு படக்குழுவை பாராட்டினர்.
இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் பேசும்போது, படம் உருவாக்கிய அனுபவத்தையும், குழுவின் ஒத்துழைப்பையும் நினைவுகூர்ந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
நடிகை வனிதா விஜயகுமார் பேசும்போது, தனது கதாபாத்திரம் சிறப்பாக அமைந்துள்ளதாகவும், அனைவரும் படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
‘லவ் ஓ லவ்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.