ஜெயிலர் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் சமூக வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது.
அதனைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவாக்கி வரும் இந்த படத்தில் மோகன்லால் சிவராஜ் குமார் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் என்று வெளியாகி உள்ளது அதாவது ஜெயிலர் 2 படத்தில் மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடு என்ற நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.