ஐசரி கணேஷ் மகளின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து வருபவர் ஐசரி கே.கணேஷ். இவர் வேல்ஸ் நிறுவனம் மூலம் பல திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார்.
- Advertisement -
சமீபத்தில் வி.ஜே சித்து இயக்கி நடிக்கும் படத்தை இவர் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது இவரின் மகளுக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்த திருமணத்தில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன், ரவி மோகன், மணிரத்தினம் , பிரபு, ஆதிக் ரவிச்சந்திரன் என பல்வேறு முன்னணி பிரபலங்கள் இணைந்து மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் திருமண வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டு வருகின்றனர்.