மகள் மருமகனுக்காக பிரம்மாண்டமான கிப்ட் கொடுத்துள்ளார் ஐசரி கணேஷ்.
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக கொடி கட்டி பறந்து வருபவர் ஐசரி கணேஷ். இவர் அவரது மகளுக்கு சமீபத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி இருந்தார். தொழிலதிபர்கள் முதல் சினிமா பிரபலங்கள் என பலரும் திருமணத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இவர் தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை தயாரித்து வருகிறார் மேலும் விஜே சித்து இயக்கி நடிக்கும் டாயங்கரம் என்ற படத்தையும் தயாரிக்க உள்ளார்.
இந்த நிலையில் தற்போது மகள் மற்றும் மருமகனுக்காக பிரம்மாண்டமான பரிசு ஒன்று கொடுத்துள்ளார். கோடிக்கணக்கான பணம் செலவு செய்து மகளுக்கு திருமணம் செய்து இருந்தாலும் தற்போது மகள் மருமகனுக்காக ஈசிஆர் மிகப்பெரிய அளவில் பீச் ஹவுஸ் ஒன்றை கட்டி மகளின் திருமணத்திற்கு பரிசு கொடுத்துள்ளார் அதில் நீச்சல் குளம் பிரம்மாண்ட தோட்டம் மினி தியேட்டர் போன்ற பிரத்தியேக வசதிகளுடன் இருக்கும் அந்த பீச் ஹவுஸ் சுமார் 100 கோடிக்கும் மேலிருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.