தமிழ் சினிமாவில் தற்போது திகில் சார்ந்த கதைகள் வரவேற்பு பெற்று வருகின்றன. அவ்வகையில், குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டு வெளிவர இருக்கும் க்ரைம் த்ரில்லர் மூவி பற்றி காண்போம்..
கன்னடப் பட இயக்குநர் ஏ.மகேஷ்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘மவுனம்’. இப்படத்தில் அபிராம் வர்மா, ஜேஎஸ்ஆர்.ரித்திக், சுமன் உள்பட பலர் நடிக்கின்றனர். சாம் மணிகண்டன் இசை அமைக்கிறார்.
மேஜிக் மக் மூவிஸ் தயாரிக்கும் இந்த க்ரைம் த்ரில்லர் படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் உருவாகிறது. அக். 20-ந்தேதி இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. 60 நாட்களில் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்.
கரோனா காலக்கட்டத்தில் நடக்கும் கதை இது. சாப்ட்வேர் என்ஜினீயரான நாயகனைத் தேடி அவருடைய முன்னாள் காதலி வருகிறார். அவரது வீட்டில் தங்கியிருக்கும் வேளையில் அதிகாலையில் படுகொலை செய்யப்படுகிறார். இந்த கொலை எப்படி நடந்தது, பின்னணி என்ன என்பது கதை’ என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதன் தொடக்க விழா சென்னையில் நடந்தது. நடிகர் பார்த்திபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.