‘ஆராணு ஞான்’ பட நடிகர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்..
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் ஜுன் 5-ந்தேதி வெளியாகிறது.
முன்னதாக, கமல்ஹாசன் ‘தசாவதாரம்’ படத்தில் 10 கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்பாக ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் நான்கு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ‘தசாவதாரம்’ படத்தில் பல்ராம் நாயுடு, பஞ்சாபி பாடகர், ஆங்கிலேயர், வயதான பாட்டி என 10 கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தார். மிகவும் பாராட்டுகள் குவிந்தது.
தற்போது, 45 கதாபாத்திரத்தில் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் மலையாள நடிகர் ஒருவர் இடம் பெற்றுள்ளார். ஜான் ஜார்ஜ் என்ற அவர் ‘ஆராணு ஞான்’ என்கிற படத்தில் 45 வேடங்களை ஏற்று நடித்துள்ளார்.
இப்படம் 2018 மார்ச் 9-ந்தேதி வெளியானது. வி.ஆர் உன்னிகிருஷ்ணன் இயக்கியிருந்தார். படம் வெளியானபோது இந்தப் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற பின்னர் இப்படத்தை ரசிகர்கள் தேடித்தேடி பார்த்து வருகின்றனர்.
மகாத்மா காந்தி, அப்துல்கலாம், சுவாமி விவேகானந்தர், டாவின்சி, இயேசு கிறிஸ்து போன்ற 45 கதாபாத்திரத்தில் ஜான்சன் ஜார்ஜ் நடித்துள்ளார். படத்தின் ரன்னிங் டைம் 1 மணி நேரம் 47 நிமிடங்கள் ஆகும்.
இந்தக் கதை குறித்து பார்த்தால் க்ளோப் மேன் என்று அழைக்கப்படும் ஒரு மனிதனைப் பற்றியது. இந்த கதாபாத்திரம் தன்னுடைய அடையாளம் என்ன என்பதை அறிந்து கொள்ள உலகம் முழுதும் பயணம் செய்யும் கதாபாத்திரமாகும். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலமும் படம் நான் யார்? எனது உண்மையான அடையாளம் என்ன? என்ற கேள்வியை எழுப்புகிறது.
கின்னஸ் சாதனைக்குப் பின்னர் ஜான்சன் ஜார்ஜுக்கு சினிமாவில் ஒரு தனி அங்கீகாரம் கிடைத்தது. இவரின் சாதனையை இன்றுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை. நீங்கள் வித்தியாசமான ஒரு திரைப்படத்தை பார்க்க விரும்பினால் ‘ஆராணு ஞான்’ படம் சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் எனவும் பாராட்டு பெற்று வருகிறது.