‘ஹாய்’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த படக்குழுவினர்!

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து படத்தின் வெற்றிக்கு ஆதரவு அளித்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார், ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா, இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின், நடிகர்கள் அம்ருதா சீனிவாசன், குரேஷி, காவ்யா, ராதிகா சரத்குமார், சுஹாசினி, பிரபு, கவின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

படத்தின் வெற்றி குறித்து பேசிய தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார், நல்ல கதையையும் தரமான படத்தையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ‘ஹாய்’ திரைப்படத்தை உருவாக்கியதாகவும், தற்போது கிடைத்து வரும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் பேசுகையில், இயக்குநர் விஷ்ணு எடவனுடனும் நடிகர் கவினுடனும் இணைந்து பணியாற்றுவது இது நான்காவது படம் என்றும், கவின் தனது பள்ளிப் பருவ நண்பர் என்றும் கூறினார். பள்ளி நாட்களில் இருவரும் கண்ட கனவு இன்று நனவாகியிருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

- Advertisement -

நடிகை அம்ருதா சீனிவாசன், ‘ஹாய்’ ஒரு அழகான ஃபீல்-குட் திரைப்படம் என்றும், ஒவ்வொரு துறையினரின் ஒருங்கிணைந்த உழைப்பே இப்படத்தை முழுமையான படமாக உருவாக்கியுள்ளதாகவும் பாராட்டினார்.

இயக்குநர் விஷ்ணு எடவன், ‘ஹாய்’ தனது முதல் திரைப்படம் என்றும், தன்னை நம்பி வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். இப்படத்தின் வெற்றி தனக்கு மட்டுமானது அல்ல; தன்னை நம்பி பயணத்தில் இணைந்த அனைவருக்கும் கிடைத்த வெற்றி என அவர் குறிப்பிட்டார்.

நடிகர் கவின் பேசுகையில், படத்திற்கு ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவு மிகுந்த மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிப்பதாக தெரிவித்தார். குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு சென்று ‘ஹாய்’ படத்தை பார்த்து மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் திரும்பலாம் என்றும் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், சுஹாசினி, விடிவி கணேஷ், சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ளார்.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ். எஸ். லலித்குமார் இணைந்து தயாரித்துள்ள ‘ஹாய்’, தற்போது ரசிகர்களின் உற்சாகமான வரவேற்புடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

HiHi Team Thanks Fans for the Overwhelming ResponseKavin