ஜிவி பிரகாஷ் நடிக்கும் நிஞ்ஜா படப்பிடிப்பு தொடக்கம்!

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24-ம் தேதி தஞ்சாவூரில் பூஜையுடன் தொடங்கியது.

அறிமுக இயக்குநர் முருகு இயக்கும் இப்படம் முழுமையான ரொமாண்டிக் காமெடி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு தஞ்சாவூரில் 20 நாட்கள் நடைபெறுகிறது.

முதலில் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஜி.வி. பிரகாஷ் குமார், தற்போது கதாநாயகனாகவும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘லவ் டுடே’, ‘பார்க்கிங்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பாராட்டைப் பெற்ற பிரார்த்தனா நடிக்கிறார். இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைக்கிறார்.

- Advertisement -

சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் நிறுவனங்களின் சார்பில் எஸ். சாய் தேவானந்த் மற்றும் கே.எஸ். சினிஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘நிஞ்ஜா’ படத்தில் ஜென்சன் திவாகர், ராதாரவி, தீபா ராமானுஜம், தேவதர்ஷினி, கல்யாணி நடராஜன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவாளராகவும், கணேஷ் சிவா படத்தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குநராகவும், பிரியா ரவி ஆடை வடிவமைப்பாளராகவும், தினேஷ் காசி சண்டைக் காட்சிகளின் இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.

ஜி.வி. பிரகாஷ் குமார், சீன் ரோல்டன் மற்றும் இயக்குநர் முருகு இணையும் இந்தப் புதிய கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘நிஞ்ஜா’ படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

G.V.Prakash KumarGV Prakash’s Ninja Movie Shooting BeginsNinja