ஜி.வி.பிரகாஷ்-கயாடு லோஹர் நடித்த ‘இம்மார்ட்டல்’ படம் வெளியீடு..

‘இம்மார்ட்டல்’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்..

தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமையாளராக கலக்கி வருகிறார் ஜி்.வி.பிரகாஷ் குமார்.

கடைசியாக இவரது நடிப்பில் ‘கிங்ஸ்டன்’ என்ற படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக திவ்யபாரதி நடித்திருந்தார்.

இந்நிலையில் ‘டிராகன்’ படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்திருந்த கயாடு லோஹர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தற்போது சிம்பு நடிக்கும் STR45 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் ‘இம்மார்ட்டல்’ படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

‘இம்மார்ட்டல்’ படத்தின் ஒளிப்பதிவாளராக அருண் கிருஷ்ணர், சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்று, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது.

‘இம்மார்ட்டல்’ திரைப்படம் ஜூன் மாதம் ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மெண்டல் மனதில்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ நடிக்க இருக்கிறார். இவரது இசைப்பணியும் தொடர்கிறது.

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு ஜிவி இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

gv prakash and kayadu lohar film first look release
actress kayadu loharG.V.Prakash KumarMusicஇம்மார்ட்டல்பிரதீப் ரங்கநாதன்