தனது மகனுக்கு, ஷாருக்கான் மனைவி டேட்டிங் அட்வைஸ்..

ஷாருக்கான் மனைவி கௌரி, தன் மகனுக்கு கூறிய அறிவுரை பற்றிப் பார்ப்போம்..

ஷாருக்கான், கௌரிகான் தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 27 வயதான ஆர்யன்கான் இயக்கிய வெப்தொடர் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ப்ரிமீயருக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் வந்து ஆர்யன்கானை பாராட்டினார்கள்.

அத்துடன், அவர் பிரேசிலை சேர்ந்த மாடல் அழகியும், நடிகையுமான லரிசா போனஸியை காதலிப்பதாக பேச்சாக உள்ளது. ஆர்யன்கான், நிகழ்ச்சிக்கு அவரை போன்றே கருப்பு நிற உடை அணிந்து வந்திருந்த லரிசாவை அனைவரும் கவனித்தார்கள். ஆர்யன் கானை விட 3 வயது மூத்தவர் லரிசா.

இந்நிலையில், காபி வித் கரண் நிகழ்ச்சியில், கரண்ஜோஹரிடம் கௌரிகான் சொன்னது பற்றி ரசிகர்கள் பேசி வருகிறார்கள். மகள் சுஹானா கானுக்கு டேட்டிங் செய்வது பற்றி அறிவுரை வழங்கி இருக்கிறீர்களா? என்று கௌரியிடம் கேட்டார் கரண் ஜோஹர். அதற்கு கௌரிகான் கூறியதாவது,

‘ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலிக்கக் கூடாது என்று சொல்லி வைத்திருக்கிறேன்’ என்றார். அப்படியென்றால், மகன் ஆர்யன்கானுக்கு என்ன அட்வைஸ் செய்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினார் கரண் ஜோஹர்.

‘திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, எத்தனை பேரை வேண்டுமானாலும் டேட் செய் மகனே. ஆனால், திருமணம் செய்து கொண்ட பிறகு கூடாது’ என்றார்.

ஆர்யன்கான் வாழ்வில் மட்டும் அல்ல, அவரின் தங்கை சுஹானா வாழ்க்கையிலும் காதல் வந்துவிட்டது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதாவின் மகன் அகஸ்தியா நந்தாவும், சுஹானாவும் காதலிப்பதாக பேசப்படுகிறது. அந்த காதலுக்கு அமிதாப்பச்சன் வீட்டிலும், ஷாருக்கான் வீட்டிலும் சம்மதம் தெரிவித்து விட்டனர்.

gauri khan advise from director aryan khan
actor shahrukh khanfamilyloveஅமிதாப்பச்சன்ஷாருக்கான்