பிரபாஸின் ரசிகர்கள் செய்த சாதனையை, ராம் சரண் ரசிகர்கள் முறியடித்துள்ள நிகழ்வு குறித்து பார்ப்போம்..
ராஜமௌலி இயக்கிய RRR படத்திற்கு பிறகு, ராம் சரணின் திரைப்படம் கேம் சேஞ்சர்.3 வருடங்களுக்கு பின், ராம் சரண் நடித்த திரைப்படம் வெளியாவதால் அவரது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
அவ்வகையில், ஆந்திராவில் ராம் சரணுக்காக ரசிகர்கள் 256 அடி கட்டவுட் ஒன்றை வைத்துள்ளனர். இதுவரை இந்திய சினிமாவிலேயே எந்த ஒரு நடிகருக்கும் இவ்வளவு பெரிய கட்டவுட் வைத்ததே இல்லை.
- Advertisement -
சுமார் 10 லட்சம் செலவு செய்து, இந்த கட்டவுட்டை வைத்ததாக சொல்லப்படுகிறது. கடந்த பல நாட்களாய் கடுமையாக உழைத்து தங்களின் ஹீரோவுக்காக ரசிகர்கள் இந்த கட்டவுட்டை உருவாக்கி இருக்கின்றனர். இது திரையுலகில் பெரிய விஷயமாக பார்க்கப்படுகின்றது.
இதற்கு முன்பு பிரபாஸிற்கு 200 அடிக்கு மேல் ஒரு கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. அந்த சாதனையை தற்போது ராம் சரண் ரசிகர்கள் முறியடித்துள்ளனர்.
இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தின் மூலம் சரிவை சந்தித்த ஷங்கர் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் மூலம் புகுந்து ஆடியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.