‘காந்தா’ படத்தில் துல்கர் சல்மான் நடிப்பை பார்த்து, சமுத்திரக்கனி வியப்பு..

துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான ‘லோகா’ படம் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பீரியட் படமான ‘காந்தா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் துல்கர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, துல்கர் சல்மானின் நடிப்பை பாராட்டியுள்ளார். இந்தப் படத்தைப் பற்றிப் பேசிய அவர், ‘துல்கரின் கதாபாத்திரம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. படத்தைப் பார்த்த பிறகு, துல்கரிடம் ஓடிச் சென்று அவரைக் கட்டிப்பிடிக்க வேண்டும் என்பதுபோல இருந்தது. படத்தில், துல்கர் தனது அற்புதமான நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார்’ என கூறினார்.

செல்வமணி செல்வராஜ் இயக்கிய இந்தப் படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 14-ந்தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி ‘அய்யா’ என்ற கதாபாத்திரத்தில் வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபு.பி இயக்கும் ‘ஆந்திர கிங் தாலுகா’ படத்தில் ராம் பொதினேனிக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். இப்படம் வருகிற 28-ந்தேதி ரிலீஸாகிறது.

dulquer performance in kaantha will shock you samuthirakani
actor dulquer salmaankaantha movieSamuthirakaniதுல்கர் சல்மான்பாக்யஸ்ரீ போர்ஸ்