Browsing tag

kaantha movie

துல்கர் சல்மான் நடிப்பில் ‘ஐ அம் கேம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு..

‘லோகா’ என்ற படத்தை தயாரித்து வெளியிட்ட துல்கர் சல்மான், அடுத்ததாக ‘காந்தா’ என்ற படத்தை தயாரித்து நடித்திருந்தார். இப்படமும் வரவேற்பு பெற்றது. தற்போது, ஆர்டிஎக்ஸ் (RDX) படத்தின் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் துல்கர் சல்மான். இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்துக்கு ‘ஐ அம் கேம்’ எனப் பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை முன்வைத்து பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதன் கதையினை […]

நெகட்டிவ் ரோலில் மம்முட்டி நடிக்கும் ‘களம் காவல்’ படத்தின் அப்டேட்ஸ்..

துல்கர் சல்கான் தயாரிப்பில் வெளியான ‘லோகா’ படம் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் ‘காந்தா’ படத்தில் நடித்தார் துல்கர் சல்மான். இந்த படம் இன்று ரிலீஸாகி பாராட்டுகளை பெற்று வருகிறது. இயக்குநருக்கும் நடிகருக்கும் இடையே நடைபெறும் ஈகோ பற்றி இப்படம் சித்தரிக்கிறது. குறிப்பாக, இப்படத்தில் துல்கரின் சிறந்த நடிப்பு பாராட்டுகளை குவித்திருக்கிறது. இந்நிலையில், இவரது தந்தையான மம்முட்டி நடித்த ‘களம் காவல்’ படம் வருகிற 27-ந்தேதி வெளியாகிறது. குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை […]

‘காந்தா’ படத்துக்கு தடை கோரிய வழக்கு அடிப்படை ஆதாரமற்றது: ராணா பேச்சு..

துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ், ராணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘காந்தா’ திரைப்படம் நாளை 14-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இப்படம் தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவுக்கு நவம்பர் 18-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தயாரிப்பு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் ராணா. ‘காந்தா’ […]

‘காந்தா’ படம் தொடர்பாக, துல்கர் சல்மானுக்கு கோர்ட் உத்தரவு..

எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘காந்தா’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்குக்கு பதிலளிக்கும்படி, தயாரிப்பு நிறுவனங்களுக்கும், துல்கர் சல்மானுக்கும் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப் பேரனும், தமிழக அரசின் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற 64 வயதான தியாகராஜன் சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், கொச்சியைச் சேர்ந்த Wayfarer Films Private Limited மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த […]

‘காந்தா’ படத்தில் துல்கர் சல்மான் நடிப்பை பார்த்து, சமுத்திரக்கனி வியப்பு..

துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான ‘லோகா’ படம் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பீரியட் படமான ‘காந்தா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் துல்கர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, துல்கர் சல்மானின் நடிப்பை பாராட்டியுள்ளார். இந்தப் படத்தைப் பற்றிப் பேசிய அவர், ‘துல்கரின் கதாபாத்திரம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. படத்தைப் பார்த்த பிறகு, துல்கரிடம் ஓடிச் சென்று அவரைக் கட்டிப்பிடிக்க வேண்டும் என்பதுபோல இருந்தது. படத்தில், […]

14-ந்தேதி ரிலீஸாகும் ‘காந்தா’ பீரியட் படம் பற்றி துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்..

துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான ‘லோகா’ திரைப்படம் வரவேற்பை பெற்றது தெரிந்ததே. இந்நிலையில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘காந்தா’ என்ற படத்தின் டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ போஸ் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘காந்தா’ படம் வருகிற 14-ந்தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘காந்தா’ படம் குறித்து சல்மான் சல்மான் தெரிவிக்கையில், ‘இக்கதையை 2019-ல் தான் கேட்டேன். தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இப்படத்தின் இயக்குநர் செல்வா இருப்பார். சினிமாவை […]

துல்கர் சல்மான் நேரில் ஆஜராக, நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்..

நடிகர் துல்கர் சல்மான் ‘லோகா’ என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். இப்படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது ‘காந்தா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், துல்கர் சல்மானுக்கு நுகர்வோர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரளாவில் உள்ள பிரபலமான பிரியாணி அரிசியின் விளம்பர தூதராக துல்கர் சல்மான் இருக்கிறார். அவர் மீது, பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த கேட்டரிங் நிறுவன ஊழியர் பி.என். ஜெயராஜன் என்பவர், நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘திருமண விழாவுக்காக, குறிப்பிட்ட பிராண்டின் […]

துல்கர்சல்மான் நடிக்கும் பீரியட் படமான ‘காந்தா’ அப்டேட்ஸ்

1950-களின் மெட்ராஸ் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு பீரியட் டிராமாவாக உருவாகி வரும் படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் துல்கர் சல்மான் உடன் பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கரின் வேஃபரர் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இந்நிலையில், இப்படம் வரும் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான பிரத்யேக போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. துல்கர் சல்மான் தயாரிப்பில் அண்மையில் […]