துல்கர் சல்மான் நடிப்பில் ‘ஐ அம் கேம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு..

‘லோகா’ என்ற படத்தை தயாரித்து வெளியிட்ட துல்கர் சல்மான், அடுத்ததாக ‘காந்தா’ என்ற படத்தை தயாரித்து நடித்திருந்தார். இப்படமும் வரவேற்பு பெற்றது.

தற்போது, ஆர்டிஎக்ஸ் (RDX) படத்தின் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் துல்கர் சல்மான். இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்துக்கு ‘ஐ அம் கேம்’ எனப் பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

இதனை முன்வைத்து பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதன் கதையினை சஜீர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து எழுதியிருக்கிறார்கள். வசனங்களை ஆதர்ஷ் சுகுமாறன் மற்றும் ஷஹபாஸ் ரசீத் எழுதியிருக்கிறார்கள். இப்படம் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் கதையாகும். இது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் 40-வது படமாகும்.

இதில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்பட பலர் துல்கர் சல்மானுடன் நடித்து வருகிறார்கள். இதன் ஆக்‌ஷன் காட்சிகளை அன்பறிவ் உருவாக்கி வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ஜிம்ஷி காலித், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக சமன் சக்கோ ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

dulquer salmaan next movie titled as im game
actor dulquer salmaanas im game moviekaantha movieகதைதுல்கர் சல்மான்