காமெடி நடிகர் யோகி பாபுவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் யோகி பாபு. தனது நகைச்சுவை பேச்சால் ரசிகர்களை ரசிக்கவும் சிரிக்கவும் வைத்துள்ளார்.
இவர் தற்போது மெடிக்கல் மிராக்கள்,ராஜா சாப், ஜெயிலர் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் யோகி பாபுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவர் தற்போது நடித்த படங்களில் ஒரு நாளைக்கு 15 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாகவும் இதனால் இவரது சொத்து மதிப்பு 75 கோடிக்கு மேலே இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.