தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் சத்யராஜ் குறிப்பிடத்தக்கவர். இங்கே.. அரசியல் கொள்கை என்ற வகையில், அவரது வாரிசுகள் எடுத்துள்ள நிலைப்பாடு பற்றிப் பார்ப்போம்..
நடிகர் சத்யராஜ், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி பல மேடைகளில் பேசியிருக்கிறார் என்பது தெரிந்ததே.
இவரது மனைவி பெயர் மகேஸ்வரி, இவர் கடந்த சில ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கிறார். இவர்களுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். இதில் சிபிராஜ் சினிமாவில் நடித்து வருகிறார். திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார்.
திவ்யாவுக்கு அரசியலிலும் அதிக ஆர்வம் உண்டு. இதன் காரணமாக அவருக்கு தேசிய கட்சிகளில் இருந்தெல்லாம் அழைப்பு வந்தது. ஆனால், அதையெல்லாம் நிராகரித்த திவ்யா அண்மையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வைத்து, திமுக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சத்யராஜ் மகள் திமுகவின் இணைந்த சில தினங்களில் அவரது மகன் சிபிராஜ், தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார்.
அவர், தனது ஆதரவு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு தான் என அறிவித்திருக்கிறார். அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் விஜய் தவெக கட்சிக் கொடியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். இதனால், சத்யராஜ் வீட்டில் அரசியல் களைகட்டி இருக்கிறது.
நேற்று பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அங்கு களத்திற்கு வந்த நடிகர் விஜய், அப்பகுதி மக்களை சந்தித்து, விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக குரல் கொடுத்ததோடு, மத்திய மாநில அரசுகளையும் சாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு அக்கட்சிக்கான தனது ஆதரவை சிபிராஜ் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பதிவிற்கு, திவ்யாவிடம் இருந்து கமெண்ட் ஏதும் வரலையா சிபி சார்?