தமிழ் சினிமாவில் முத்திரை பதித்து வரும் மாரி செல்வராஜின் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ படம் வருகிற 17-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்பட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்
இந்நிலையில், மாரி செல்வராஜின் குருநாதர் இயக்குநர் ராம் ‘பைசன்’ படத்தை பார்த்து தெரிவித்த விமர்சனம் குறித்து தகவல் வெளியாகிய உள்ளது.
அதாவது, ‘மாரி செல்வராஜ் இதுவரை இயக்கிய படங்களில் இதுதான் தலைசிறந்த படைப்பு’ என இயக்குநர் ராம் கூறியுள்ளதாக, மாரி செல்வராஜ் பெருமிதமாய் தெரிவித்துள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக பரியேறும் பரிமாள், மாமன்னன், வாழை ஆகிய படங்கள் வெளியாகின என்பது நினைவுகூரத்தக்கது.