விக்ரம் நடிப்பில் ‘மகான்-2’ படம்: கார்த்திக் சுப்பராஜ் அப்டேட்ஸ்..

புதுமுகங்களின் நடிப்பில் திரைப்பட விழாக்களுக்காக படமொன்றை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். அதற்குப் பிறகு யாருடைய படத்தை இயக்கவுள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

அவரிடம் ‘மகான் 2’ உருவாகுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‘மகான் 2-ம் பாகத்திற்கான ஐடியா இருக்கிறது. அதனை உட்கார்ந்து எழுத வேண்டும். அது 2027 அல்லது 2028-ம் ஆண்டு எதிர்பார்க்கலாம்’ என தெரிவித்தார்.

2022-ம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘மகான்’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா, சனத், வாணி போஜன் உள்பட பலர் நடித்திருந்தனர். இதன் 2-ம் பாகத்தின் ஐடியா இருப்பதாக கார்த்திக் சுப்பராஜ் கூறியிருப்பது, விக்ரம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்திருக்கிறது. மேலும், விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி முடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படமும் விரைவில் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

director karthik subbaraj about mahaan part 2 making
Actor Vikramdirector karthik subbarajmahaan part 2துருவ நட்சத்திரம்விக்ரம்