காப்புரிமை விவகாரத்தில் நயன்தாராவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தனுஷ், அண்மையில் சிம்புவை வைத்து வடசென்னை கதைக்களத்தில் வெற்றிமாறன் இயக்க உள்ள படத்திற்காக ரூ.20 கோடி கேட்டதாகவும் செய்திகள் உலா வந்தன.
ஆனால், அது முற்றிலும் வதந்தி என்று கூறிய இயக்குனர் வெற்றிமாறன், தான் தனுஷிடம் இதுபற்றி பேசியபோது, அவர் உடனே தனக்கு தடையில்லா சான்று வழங்க சம்மதித்ததாகவும், அதற்காக தனக்கு எந்தவித தொகையும் கொடுக்க வேண்டாம் என கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதனால், வட சென்னை யூனிவர்ஸை சிம்பு – தனுஷை வைத்து உருவாக்கத் தொடங்கிவிட்டார் வெற்றி. இந்நிலையில், தற்போது விஜய்யின் ஜனநாயகன் படக்குழுவுக்கு தனுஷ் செய்துள்ள உதவி பற்றிய தகவலும் வெளியாகி வைரலாக பேசப்பட்டு வருகிறது.
அதாவது, தனுஷ் படத்திற்காக ரூ.4 கோடி செலவில் பிரம்மாண்ட செட் ஒன்று போடப்பட்டது. அந்த செட்டில் தனுஷ் பட ஷூட்டிங் முடிவடைந்ததை அடுத்து, விஜய்யின் ஜனநாயகன் படக்குழு, தங்கள் படத்தின் பாடல் காட்சியை படமாக்கிக் கொள்ள அனுமதி கேட்டிருக்கிறார்கள். இதற்கு தனுஷ், உடனே ஓகே சொல்லிவிட்டார் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
இவ்வாறு சிம்பு, விஜய் படங்களுக்கு இலவசமாக வாரி வழங்கிய தனுஷ், நயன்தாராவிடம் மட்டும் ஏன் பணம் கேட்டார். அவர்மீது ஏன் இவ்வளவு கோபம் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.