டப்பா ரோல்-ஆன்ட்டி ரோல் சர்ச்சை பேச்சு: சிம்ரன் விளக்கம்..

‘டப்பா ரோல்’ சர்ச்சை பேச்சுக்கு சிம்ரன் தெரிவித்துள்ள விளக்கம் காண்போம்..

சசிகுமார்-சிம்ரன் இருவரும் கணவன்-மனைவியாக நடித்து அபிஷன் இயக்கத்தில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வரவேற்பு பெற்றுள்ளது. வசூலிலும் லாபத்தை கொடுத்துள்ளதால், படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே சிம்ரன் தெரிவிக்கையில் ‘டப்பா ரோல் பண்ணுவதற்கு பதில் ஆன்ட்டி ரோல் எவ்வளவோ மேல்’ என்று பேசினார். அந்தச் சமயத்தில் ஜோதிகா நடித்த ‘டப்பா கார்டல்’ வெப் சீரிஸ் வெளியாகி இருந்தது.

சிம்ரன் பேச்சை வைத்து, பலரும் ஜோதிகாவைதான் குறிப்பிட்டார் என பலரும் தெரிவித்தார்கள். ஆனால், இந்த சர்ச்சைக்கு எந்தவொரு பதிலும் கூறாமல் இருந்தார் சிம்ரன். தற்போது, இந்த சர்ச்சை குறித்த கேள்விக்கு, ‘அதை நானும் பார்த்தேன். அவரவர் யூகங்களுக்கு எழுதிக் கொண்டார்கள்.

‘டப்பா கார்டல்’ வெப் சீரிஸ் பார்த்துவிட்டேன். அருமையாக இருந்தது. நான் குறிப்பிட்டு பேசிய நபருக்கு, சொன்ன விஷயம் சரியாகப் போய் சேர்ந்துவிட்டது.

அந்த நபர் புரிந்துகொண்டு என்னிடம் மன்னிப்புக் கேட்டார். மேலும், அவர் என்னை காயப்படுத்தும் விதத்தில் கூறவில்லை எனவும் குறுஞ்செய்தி அனுப்பினார்’ என்றார் சிம்ரன். இதில், ஜோதிகாவை குறிப்பிடவில்லை என்று எங்கேயும் சிம்ரன் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

dabba roll controversy actress simran explain
actor sasikumaractress simrantourist family movieநடிகை சிம்ரன்நடிகை ஜோதிகா