சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ படத்தின் கதை என்ன?: வைரலாகும் தகவல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்து இணையவெளியில் பல தகவல்கள் வெளியாகின்றன.

முன்னதாக, ‘கூலி’ என தலைப்பு வைப்பதற்கு முன்பு ரஜினிகாந்த் கை நிறைய வாட்ச்சுகளை வைத்துக் கொண்டு வில்லத்தனமாக சிரித்த முகத்துடன் போஸ்டர் வெளியிடப்பட்டது தெரிந்ததே. அந்த போஸ்டரில் தங்க வாட்ச்சுகள் இடம் பெற்றிருக்கும். அதன் பின்னணி என்ன?

அதாவது, வின்டேஜ் தங்க வாட்ச்சுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் திருடப்பட்ட டெக்னாலஜியை பயன்படுத்தி (ரஜினி) தேவா எனும் கடத்தல்காரர், தன் பழைய மாஃபியா கூட்டத்தை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்கிறார்.

அவர் தன் டீமை கொண்டு வர நினைக்க, அது தேவா நினைத்ததை விட பெரிய விஷயமாக புது உலகமாக மாறுகிறது. அந்த உலகில் குற்றம், பேராசையே ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் முடிவு என்னவாகிறது. இதுதான் ‘கூலி’ படத்தின் கதை என கணிக்கப்படுகிறது. படம் வெளியானால் தான் கதை குறித்து தெரிய வரும்.

முன்னதாக, பாலிவுட் நடிகர் அமீர்கானின் தாஹா கதாபாத்திரம் குறித்தும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியானது. இவர் படத்தில் 15 நிமிடம் வருகிறார். தேவாவுடன் ஆக்ரோஷமாக மோதுகிறார் என்றெல்லாம் தகவல் பரவியது நினைவுகூரத்தக்கது. ஆகஸ்ட் 14ந்தேதி பொறுத்திருந்து பார்ப்போம்.

coolie movie story leaked information goes viral
coolie movieRajinikanthstoryரஜினிகாந்த்லோகேஷ் கனகராஜ்