Browsing category

Tamil News

‘விஸ்வநாதன் & சன்ஸ்’ படத்தின் புதிய பாடல் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடித்த ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள தனது 46-வது படமான ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. […]

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீடு: குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளதாக படக்குழு நம்பிக்கை

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர், நடிகர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு படத்தின் உருவாக்கம் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். இயக்குநரும் கதாநாயகனுமான பாரி இளவழகன், பெரம்பூரை பின்னணியாகக் கொண்டு, வெவ்வேறு கலாச்சாரத்தைச் சேர்ந்த இருவரின் காதல் மற்றும் குடும்ப உறவுகளை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார். கதாநாயகியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ள நிலையில், ரோஜா, […]

ஐஸ்வர்யா ராஜேஷின் “ஓ சுகுமாரி” படத்தின் டிரெய்லர் வெளியானது

டீசர் மற்றும் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஓ! சுகுமாரி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம், காதல், நகைச்சுவை மற்றும் கிராமிய பின்னணியை மையமாகக் கொண்ட முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்துள்ளார். வெளியான ட்ரெய்லர், ‘தாமினி’ […]

நீதிமன்ற அனுபவம் என் நடிப்பையே மாற்றியது – நடிகை நிமிஷா சஜயன்

வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வரும் நடிகை நிமிஷா சஜயன், தற்போது சஜீவ் பழூர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்தக் கதாபாத்திரத்திற்காக மேற்கொண்ட தயாரிப்பில், உண்மையான நீதிமன்ற விசாரணைகளை நேரில் பார்த்த அனுபவம் தனது நடிப்பு அணுகுமுறையையே மாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார். படம் குறித்து பேசிய நிமிஷா சஜயன், “இதற்கு முன்பும் ஒரு திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளேன். ஆனால், ‘என்ன விலை’ எனக்கு முற்றிலும் […]

பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி மறைவு

இந்திய திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகியும், பல தலைமுறைகளின் மனதை தனது மந்திரக் குரலால் கவர்ந்த இசை ஜாம்பவானுமான எஸ். ஜானகி காலமானார் என்ற செய்தி, இசை ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய அவர், தனது தனித்துவமான குரல், உணர்வுபூர்வமான பாடல் வெளிப்பாடு மற்றும் அபாரமான திறமையால் இந்திய இசை வரலாற்றில் அழியாத முத்திரையைப் பதித்தார். பல […]

முதலமைச்சர் விஜய்யை சந்தித்த அதர்வா, கவின்… நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பதிவு!

தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை நடிகர்கள் அதர்வா முரளி மற்றும் கவின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சமீப காலமாக தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் முதலமைச்சரைச் சந்தித்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பும் கவனம் பெற்றுள்ளது. நடிகர் அதர்வா முரளி நடித்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், அதன் வெளியீட்டுக்கு முன்பாக முதலமைச்சர் விஜய்யை சந்தித்து அவரது வாழ்த்துகளையும் ஆசியையும் பெற்றார். இதுகுறித்து தனது எக்ஸ் […]

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் பல மொழிகளில் உருவாகி வரும் அவரது 41வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதுவரை ‘DQ41’ என்ற தற்காலிக தலைப்பில் உருவாகி வந்த இப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ (Sri Sri) எனப் பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ரவி நெலகுடிதி இயக்கும் இப்படத்தில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பள்ளி சீருடையில் மொட்டை […]

கமல் சாருடன் நடிக்க வேண்டும் – யோகி பாபு ஆசை!

நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள 300வது திரைப்படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ வருகிற ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார். யோகி பாபுவுடன் அனாமிகா மஹி, காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி, எம். சௌந்தர்யா சரவணன், ரஞ்சன் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை பிரதீப் காளிராஜா, படத்தொகுப்பை […]

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய அதிரடி போஸ்டர் வெளியீடு!

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தால் ஏற்படும் பாதிப்புகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. Zee Studios மற்றும் MIG Production இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சேட்டன் DK இயக்கியுள்ளார். சாகர் B. ஷிண்டே எழுதி தயாரித்துள்ள இப்படம், ஜூலை 24, 2026 அன்று இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மனித உடல்நலத்தில் நச்சு பூச்சிக்கொல்லி விவசாயம் ஏற்படுத்தும் தீவிர […]

ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியலை பேசும் புதிய திரைப்படம்!

Tam’s Consultancy தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தமிழ்வாணன் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘Production No: 2’. இப்படத்தை, 2017-ம் ஆண்டு வெளியான ‘போங்கு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாஜ் இயக்குகிறார். ஏலகிரி மலையில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களுக்கு நேர்ந்த அநீதிகளை உண்மைத் தன்மை மாறாமல் பதிவு செய்யும் படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது. பொதுவுடைமை கொள்கைகளின் தாக்கம், சமூக பாகுபாடுகள், கல்வி மற்றும் […]