Browsing category

News

கால்நூற்றாண்டு கால சக்ஸஸ் ஃபார்முலா என்ன?: இயக்குனர் சுந்தர்.சி விளக்கம்

தமிழ்சினிமாவில், சுமார் 25 ஆண்டுகாலமாக வெற்றியுலா வருபவர் சுந்தர்.சி. இவர் சாதனையின் இலக்கணம் பற்றிப் பார்ப்போம்.. ‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, ரஜினி நடிப்பில் அருணாச்சலம், கமல் நடிப்பில் அன்பே சிவம் போன்ற படங்களையும் இயக்கி கவனம் ஈர்த்தார். பின்னர், கிரி, வின்னர், தலைநகரம் என மாஸ் காமெடி படங்களையும் வடிவேலு கூட்டணியில் கொடுத்தவர் சுந்தர்.சி. தற்போது இவர்கள், நீண்ட இடைவெளிக்கு பிறகு கலக்க வரும் படம் ‘கேங்கர்ஸ்’. இப்படம் வரும் 24-ந்தேதி ரிலீஸாகிறது. […]

கமலுடன் பதற்றமின்றி நடிக்க, சிம்பு கொடுத்த டிப்ஸ்: அசோக்செல்வன் சுவாரஸ்ய தகவல்

‘தக் லைஃப்’ படத்தில் கமலுடன் இணைந்து நடித்த அசோக்செல்வன் சுவாரஸ்ய நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார். அது பற்றிப் பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு மற்றும் பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் ஆகியோர் இணைந்த ‘தக் லைஃப்’ படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் கிளிம்ப்ஸ், போஸ்டர்ஸ், முதல் சிங்கிள் லான்ச் ஆகியவையும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், கமலுடன் முதல் முறையாக அசோக் செல்வனும் நடித்துள்ளார். படப்பிடிப்பில் கமல் […]

அஜித் படமாக இருந்தால் என்ன; எங்கள் சொத்தை எப்படி நீ திருடலாம்?: கங்கை அமரன் ஆவேசம்

‘என் வீட்டுக்குள் அனுமதி இல்லாமல் எப்படி நீ வரலாம்’ என்ற கங்கை அமரனின் ஆவேசப் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ‘காப்பி ரைட்ஸ்’ தொடர்பாக அவர் பேசியதாவது: ‘இசை மற்றும் பாடல்கள் குறித்த காப்பி ரைட்ஸ் விவகாரத்தில் உலக அளவில் என்ன விதி இருக்கிறதோ, அதைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். இந்திய விதியை நாங்கள் பின்பற்றவில்லை. கதை ஆசிரியருக்கு கதையில் உரிமை உண்டு, அந்தப் படம் எத்தனை மொழிகளில் வெளிவந்தாலும், அவர்களுக்கு அதில் உரிமை உண்டு. ஆனால், […]

சிவாஜி வீடு ஜப்தி வழக்கில், கோர்ட் முக்கிய உத்தரவு: நடிகர் பிரபு மகிழ்ச்சி

சிவாஜியின் ‘அன்னை இல்லம்’ ஜப்தி வழக்கில், இன்று நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு காண்போம்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், இளைய மகன் பிரபு. இதில், ராம்குமாரின் மகன் துஷ்யந்த் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். பின்னர், சினிமா பட தயாரிப்பில் ஈடுபட்டார். அவர் தயாரித்த ‘ஜகஜால கில்லாடி’ படத்தை எழில் இயக்க, விஷ்ணு விஷால், சுமதி, யோகிபாபு, நிவேதா பெத்துராஜ், மொட்டை ராஜேந்திரன், ராதாரவி, நளினி உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை […]

போதைப்பொருள் பயன்படுத்தினேன்: போலீஸில் வில்லன் நடிகர் ஒப்புதல்

ஜிகர்தண்டா பிளஸ், குட் பேட் அக்லி போன்ற படங்களில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, போலீஸார் விசாரணையில் போதைப்பொருள் பயன்படுத்தியதை தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவர் தெரிவிக்கையில், போதைப் பொருளுக்கான பணத்தை கூகுள் பே மூலம் செலுத்தி விடுவேன். இந்த விற்பனையாளர்களின் அடையாளங்கள், பரிவர்த்தனையான தேதிகள் எனக்கு நினைவில் இல்லை. மெத்தம்பேட்டமைனை முகர்ந்து பார்த்துள்ளேன். எப்போதாவது கஞ்சா புகைப்பேன். குறிப்பாக யாராவது படப்பிடிப்பு தளத்திற்கு கொண்டு வந்தால் புகைப்பேன்’ என கூறியுள்ளார். நாங்கள் […]

நடிகர் நெப்போலியன் மகனின் உடல்நிலை பற்றி தவறான தகவல்: போலீஸில் புகார்

நடிகர் நெப்போலியன் தன்னுடைய மகன் தனுஷுக்காக அமெரிக்காவில் குடியேறினார். பின்னர், தனுஷ்க்கு ஜப்பானில் மிக சிறப்பாக திருமணம் நடைபெற்றது. நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது தெரிந்ததே. இந்நிலையில், தற்போது நெப்போலியன் மகனின் உடல்நிலை குறித்து இணையத்தில் வதந்தி பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மயோபதி மருத்துவமனை மருத்துவர் திருநெல்வேலி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், ‘நான் முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன் அவர்கள் நடத்தி வரும் ஜீவன் […]

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் திரைப்படம்..3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் படத்தின் 3 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்று சச்சின். இந்தத் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார். மேலும் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், தாடி பாலாஜி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது […]

குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சம்பளத்தை உயர்த்தி அஜித்.. அடுத்த படத்திற்கு இத்தனை கோடியா.??

குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் சம்பளத்தை உயர்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் அர்ஜுன் தாஸ்,சுனில், திரிஷா, பிரசன்னா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]

ஜனநாயகன் : தமிழக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..! எத்தனை கோடி தெரியுமா?

ஜனநாயகன் படத்தின் தமிழக உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும்,உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்களை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் பாபி தியோல், கௌதம் மேனன், பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமிதா பைஜு போன்ற பல […]

பிரியங்கா தாலி எடுத்துக் கொடுக்க, கோலாகலமாக நடந்து முடிந்த அமீர்,பாவனி திருமணம்.. போட்டோஸ் இதோ..!

அமீர் மற்றும் பாவணியின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் சின்னத்தம்பி சீரியல் மூலம் பிரபலமானவர் பாவனி ரெட்டி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். அதே நிகழ்ச்சியில் அமீரும் போட்டியாளராக பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சியில் திருமண வாழ்க்கை குறித்து பாவனி கூறியது அனைவர் கண்களையும் குளமாக்கியது. பிக் பாஸ் முடிந்த பிறகும் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்து வந்த நிலையில் தற்போது […]