விஜய் சேதுபதி நடிக்கப் போகும் புதிய படத்தின் வில்லன் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
ஹீரோ வில்லன் இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என அனைவராலும் கொண்டாடப்படும் இவர் நடிப்பில் பட்டையைக் கிளப்பி வருகிறார். தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பேன் இந்தியா அளவில் உருவாக உள்ள படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தை சார்மி கவுர் தயாரிக்க உள்ளார்.
இந்நிலையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது புஷ்பா மாமன்னன் போன்ற படங்களில் வில்லனாக மிரட்டி இருக்கும் பகத் பாசில் இந்த படத்திலும் வில்லனாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.