Browsing category

News

உலக இசை தினத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் கொண்டாடிய அனிருத்

உலக இசை தினத்தை முன்னிட்டு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடைபெற்ற ‘வைப் வித் அரவிந்த்’ இசை நிகழ்ச்சி, ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரனின் ரசிகர்களால் கொண்டாட்டமாக மாற்றப்பட்டது. 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி, இசை மற்றும் ரசிகர்களின் உற்சாகத்தால் களைகட்டியது. பிராண்ட் அவதார், அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ், யுனிவர்சல் மியூசிக் இந்தியா மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யூ இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், அனிருத்தின் இசைப் பயணத்தையும் அவரது புதிய சுயாதீன இசை முயற்சியான ‘அரவிந்த்’ […]

யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

“டாக்ஸிக்” திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 26, 2026 அன்று பிரம்மாண்டமாக வெளியாகிறது! ராகிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் மிகப்பெரிய திரைப்படங்களில் ஒன்றான ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம், உலகம் முழுவதும் 2026 ஆகஸ்ட் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய போஸ்டரில், யாஷ் ஏற்றுள்ள ராயா (Raya) மற்றும் டிக்கெட் […]

நகைச்சுவையுடன் மனதை தொடும் அழகான கதை உள்ள படம் ‘கான் சிட்டி’!

‘கான் சிட்டி’ டிரெய்லர் வெளியீடு: அர்ஜூன் தாஸ் நடிப்பில் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ஜூன் 26ஆம் தேதி திரைக்கு வருகிறது. பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும் பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் டிரெய்லர் பிரத்யேகமாக திரையிடப்பட்டதுடன், படக்குழுவினர் திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, […]

அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்’ ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெளியீடு

இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகியுள்ள புராண சாகச திரைப்படமான ‘நாகபந்தம்’ (Nagabhandham) வரும் ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. வெளியீட்டிற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், படக்குழு இந்தியா முழுவதும் தீவிர விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. விராட் கர்ணா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் மையக் கதையையும், அதன் மர்ம உலகத்தையும் ட்ரெய்லர் விறுவிறுப்பாக அறிமுகப்படுத்துகிறது. […]

“மேரேஜ் ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

ரீல் பெட்டி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய காமெடி-கமர்ஷியல் திரைப்படமான ‘மேரேஜ் ஸ்டோரி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம், 2024-ஆம் ஆண்டு வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘அத்தோமுகம்’ திரைப்படத்திற்குப் பிறகு, இயக்குநர் சுனில் தேவ் மற்றும் நடிகர் எஸ்.பி. சித்தார்த் மீண்டும் இணையும் படைப்பாக அமைந்துள்ளது. முன்னதாக த்ரில்லர் கதைக்களத்தில் ரசிகர்களை கவர்ந்த […]

சூர்யாவின் “விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்” படத்தின் “பட்டாம்பூச்சி” பாடல் வெளியானது!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான “விஸ்வநாத் & சன்ஸ்”, 2026 ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம், தற்போது தனது முதல் சிங்கிள் வெளியீட்டின் மூலம் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட “பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” பாடல், இசை ரசிகர்களிடையே அமோக […]

ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் குஷ்புவின் மகள்!

தமிழ் சினிமாவில் விளையாட்டு திரைப்படங்களுக்கு புதிய பரிமாணத்தை உருவாக்கும் முயற்சியாக, வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் “அட்டாக்கர்” திரைப்படம் இன்று சென்னையில் நடைபெற்ற படபூஜையுடன் இனிதே துவங்கியது. BSE-யில் பட்டியலிடப்பட்டுள்ள ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம், பல்வேறு காரணங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் கதாநாயகனாகவும், நடிகர்-இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவின் மகளான அவந்திகா சுந்தர் கதாநாயகியாகவும் அறிமுகமாகும் இந்த […]

கோபத்தை வெற்றியாக மாற்றும் “வஞ்சம் தீர்” – கவனம் ஈர்க்கும் புதிய ஆல்பம் பாடல்!

புஷ்பநாதன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அக்ஷயா பிக்சர்ஸ் LLP இணைந்து தயாரித்துள்ள “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மனித மனதில் மறைந்திருக்கும் கோபம், ஏமாற்றம், வஞ்சம் மற்றும் பழிவாங்கும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல், அதன் வித்தியாசமான காட்சியமைப்பும் ஆழமான கருத்தும் காரணமாக சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. “ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் இருக்கும் சாத்தான் பேசினால் என்ன சொல்வான்?” என்ற சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள […]

தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியின் D55 திரைப்படத்திற்கு ‘ஓம்’ என தலைப்பு அறிவிப்பு!

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியின் D55 திரைப்படத்திற்கு “ஓம்: சேப்டர் 1” என தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரம்மாண்ட தலைப்பு அறிவிப்பு விழா சென்னை நகரில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. R Take Studios மற்றும் Wunderbar Films நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம், சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘அமரன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய […]

இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்’!

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான ‘லவ்வர் பாய்’ அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை கிருத்தி ஷெட்டி நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் அட்லியின் முன்னாள் உதவி இயக்குநரான அசோக் இயக்குகிறார். இதன் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். காதல், உணர்வுகள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தத் திரைப்படம், […]