Browsing category

News

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ பூஜையுடன் தொடக்கம்

இந்திய சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களான கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணையும் மிகப்பெரிய திரைப்படமான ‘தர்மன்’ அதிகாரப்பூர்வமாக இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனுடன் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கடந்த ஐந்து தசாப்தங்களாக இந்திய சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் நட்பு […]

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘நாகபந்தம்’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு!

புராணம், மர்மம், சாகசம் மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளின் சங்கமமாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படமான ‘நாகபந்தம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படம், வரலாறு மற்றும் ஆன்மிகப் பின்னணியுடன் கூடிய மிகப்பெரிய திரையரங்கு அனுபவமாக உருவாகியுள்ளது. வரும் ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள், ஊடக நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். […]

அருள்நிதியின் “டிமான்டி காலனி 3” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் திகில் திரைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய முக்கியமான படங்களில் ஒன்றாக திகழ்கிறது ‘டிமான்டி காலனி’. 2015ஆம் ஆண்டு வெளியான முதல் பாகமும், அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாம் பாகமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் இந்த திகில் திரில்லர் திரைப்படம், […]

விஷாலின் ‘மகுடம்’ பட ‘லிங்கா’ பாடலால் கவனம் ஈர்த்த V7H!

நடிகர் விஷால் இயக்கி நடித்து வரும் ‘மகுடம்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான முதல் சிங்கிளான “லிங்கா…” பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான இரண்டு நாட்களிலேயே மில்லியன் கணக்கான பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ள இந்த பாடல், இளைஞர்கள் மத்தியில் வேகமாக பிரபலமடைந்துள்ளது. குறிப்பாக இந்த பாடலை பாடியுள்ள ராப் பாடகர் வினோத் என்கிற V7H, தனது தனித்துவமான […]

முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 100 பேச்சாளர்கள் பங்கேற்பு!

அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா ஏற்பாட்டில், தமிழக முதல்வர் மாண்புமிகு சி. ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு “வாகைத் தலைவனுக்கு வாழ்த்தரங்கம்” என்ற சிறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. “100 பேச்சாளர்கள் – 100 தலைப்புகள் – ஒரே தலைவர்” என்ற தனித்துவமான கருத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்வில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேச்சாளர்கள் முதல்வர் விஜய்யின் அரசியல் பயணம், மக்கள் நலப் பணிகள், தலைமைத்துவ பண்புகள் மற்றும் சமூகப் பங்களிப்புகள் […]

“குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய படம்”… ‘கான் சிட்டி’ குறித்து மனம் திறந்த அர்ஜுன் தாஸ்!

தனித்துவமான குரலும், வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகளும் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது தனது புதிய திரைப்படமான ‘கான் சிட்டி’ மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். ஆக்‌ஷன், திரில்லர் மற்றும் குடும்ப உணர்வுகள் கலந்த இந்த திரைப்படம், அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அர்ஜுன் தாஸ், தனது சினிமா அனுபவங்கள், ரசிகர்களின் ஆதரவு, கதாபாத்திரத் தேர்வுகள் மற்றும் […]

‘ஹபீபி’ வெற்றிக்கு நன்றி கூறிய படக்குழு… உணர்வுபூர்வமாக பேசிய கஸ்தூரி ராஜா – மீரா கதிரவன்!

நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஹபீபி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் கலந்து கொண்ட நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய பாடலாசிரியர் யுகபாரதி, உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே மீரா கதிரவனை அறிந்திருப்பதாகக் கூறினார். பல ஆண்டுகளாக அவர் கனவு கண்ட வெற்றியை ‘ஹபீபி’ […]

ஹாலிவுட் ஸ்டார் ஏஞ்சலினா ஜோலியுடன் இணையும் பிரியங்கா சோப்ரா: ரசிகர்கள் உற்சாகம்!

உலகளவில் புகழ்பெற்ற இந்திய நடிகையான பிரியங்கா சோப்ரா, மீண்டும் இந்திய சினிமாவுக்குத் திரும்பியிருக்கும் அதே வேளையில், ஹாலிவுட்டில் ஒரு மிகப்பெரிய புராஜெக்ட்டில் கமிட்டாகியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நட்சத்திரம் ஏஞ்சலினா ஜோலியுடன் இணைந்து அவர் புதிய படம் ஒன்றில் பணியாற்றவுள்ளார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய சினிமாவில் என்ட்ரி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படமான ‘வாரணாசி’ மூலம், சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரியங்கா சோப்ரா இந்திய சினிமாவுக்குத் திரும்பியுள்ளார். இத்திரைப்படத்தில் […]

விஷாலின் ‘மகுடம்’ படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் விஷால் தனது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் சினிமா மீதான ஆழமான ஈடுபாட்டால் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்தவர். தற்போது அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படைப்பாக உருவாகி வரும் அதிரடி வணிக திரைப்படம் ‘மகுடம்’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம், அந்நிறுவனத்தின் 99வது படைப்பாகவும், நடிகர் விஷாலின் 35வது திரைப்படமாகவும் உருவாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் இப்படம், தெலுங்கில் […]

சமூக மாற்றத்திற்கான அங்கீகாரம்: டெல்லி தமிழ் சங்க விருது பெற்ற ‘நந்தன்’ படக்குழு!

சமூக நீதியை வலியுறுத்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படமாக நடிகர் சசிகுமார் நடித்த ‘நந்தன்’ திரைப்படத்தை டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவித்துள்ளது. இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் 2024-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், தலித் பஞ்சாயத்து தலைவர்கள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் நிர்வாக சவால்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பதவியில் இருந்தாலும் உரிய அதிகாரங்களையும் அங்கீகாரத்தையும் பெற முடியாமல் போராடும் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் நிஜ வாழ்க்கை அனுபவங்களை ‘நந்தன்’ திரைப்படம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. குறிப்பாக, […]