Browsing category

News

விஜய் சேதுபதியின் ‘96’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ‘96’ திரைப்படம், வரும் அக்டோபர் 9, 2026 அன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. சி. பிரேம்குமார் எழுதி இயக்கிய இப்படம், பள்ளிப் பருவத்தில் தொடங்கிய காதல் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் இருவரின் நினைவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. படத்தில் விஜய் சேதுபதி ராம் கதாபாத்திரத்திலும், திரிஷா ஜானு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆதித்யா […]

ஏகன் நடித்த ‘ஹைக்கூ’ டிரெய்லர் வெளியானது!

ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அந்த வரிசையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஹைக்கூ’. இளமைத் துள்ளல், காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ […]

ரசிகர் மன்றம் தொடங்கி உங்களை நீங்களே கேலிக்கூத்தாக்காதீங்க – ரிஷி, சனந்துக்கு மிஷ்கின் அட்வைஸ்!

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டோரதி’. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படக்குழுவின் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய திருநர் சமூக ஆர்வலர் ஷபிதா, கடந்த 16 ஆண்டுகளாக திருநர் சமூகத்திற்காக பணியாற்றி வருவதாகக் கூறியதுடன், ‘டோரதி’ தங்கள் சமூகத்தின் குரலாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். […]

‘ராமாயணா’வில் தசரதராக அருண் கோவில்.. வெளியானது புதிய போஸ்டர்!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், ராமரின் தந்தையும் அயோத்தி மன்னருமான தசரதர் கதாபாத்திரத்தில் நடிகர் அருண் கோவில் இடம்பெற்றுள்ளார். இந்திய ரசிகர்களால் ராமர் கதாபாத்திரத்தில் மிகவும் பிரபலமாக அறியப்படும் அருண் கோவில், தற்போது அதே காவியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தசரதர் கதாபாத்திரத்தில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில், தசரத மன்னருக்கே உரிய கம்பீரமான தோற்றத்தில் அருண் கோவில் […]

₹1,000-க்கு 4 சேலைகளா? – வேலவன் ஸ்டோர்ஸில் சல்மா அருண் உற்சாக ஷாப்பிங்!

‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார். கடையின் பல்வேறு தளங்களையும் சுற்றிப் பார்த்த அவர், பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான ஆடைகள் மற்றும் பொருட்களை ஆர்வத்துடன் பார்த்து ரசித்துள்ளார். 3 சேலைகள் ₹1,000… ஆச்சரியப்பட்ட சல்மா அருண்! வேலவன் ஸ்டோர்ஸின் Saree Collection-ல் தனது ஷாப்பிங்கை தொடங்கிய சல்மா அருண், 3 […]

வேலவன் ஸ்டோர்ஸில் நடிகை சியமந்த கிரண் உற்சாக ஷாப்பிங்… ட்ரெண்டிங் சேலைகளை பார்த்து அசந்துபோன நடிகை!

சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார். தனது சீரியல் மற்றும் ஷூட்டிங்கிற்காக அடிக்கடி சேலை அணிந்து வரும் அவர், தனக்குப் பிடித்த ஏராளமான சேலைகளை ஆர்வத்துடன் தேர்வு செய்து பார்த்துள்ளார். பல்வேறு டிசைன்களில் இடம்பெற்றிருந்த சேலைகளைப் பார்த்த சியமந்த கிரண், 3 சேலைகள் ₹1,000, பிளவுஸுடன் கூடிய சேலைகள் ₹375, ₹645, ₹999 உள்ளிட்ட பல்வேறு விலை வரம்புகளில் இருப்பதைப் […]

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அசோக் செல்வன்!

ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து, அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களின் ஆதரவுடன் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையடுத்து படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து, படத்திற்கு ஆதரவளித்ததற்கும் ரசிகர்களிடம் படத்தை கொண்டு சேர்த்ததற்கும் நன்றி தெரிவித்தனர். […]

ஆசிய விளையாட்டில் சாதனை படைத்த வித்யா ராம்ராஜை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் தனுஷ்

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜை நடிகர் தனுஷ் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். மகளிர் 4×400 மீட்டர் ரிலேவில் தங்கப் பதக்கம், Mixed 4×400 மீட்டர் ரிலேவில் வெள்ளிப் பதக்கம் மற்றும் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் என மொத்தம் மூன்று பதக்கங்களை வித்யா ராமராஜ் வென்றுள்ளார். இந்நிலையில், அவரது சாதனையைப் பாராட்டும் விதமாக நடிகர் தனுஷ் அவரை […]

அமீர் நடிக்கும் மாகாளி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்க, நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மாகாளி’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே திட்டமிட்டபடி முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்புக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாரி செல்வராஜின் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ்.பி. அரவிந்த் இப்படத்தை எழுதி இயக்குகிறார். சமூக அக்கறை கொண்ட அழுத்தமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வேலூர் மற்றும் இராணிப்பட்டி பகுதிகளில் நடைபெற்றது. […]

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகர் சிபிராஜ்!

‘எண்ணிக்கையை விட தரமே முக்கியம்’ என்ற கொள்கையுடன், வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் சிபிராஜ். திரையரங்கம் மற்றும் ஓடிடி என இரு தளங்களிலும் கவனம் செலுத்தி வரும் அவர், தற்போது தயாரிப்பாளராகவும் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். தனது பிறந்தநாளான இன்று, ‘அண்டர்டாக் ஃபிலிம்ஸ்’ (Underdog Films) என்ற புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை சிபிராஜ் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 1’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே […]