Browsing category

Latest News

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் பல மொழிகளில் உருவாகி வரும் அவரது 41வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதுவரை ‘DQ41’ என்ற தற்காலிக தலைப்பில் உருவாகி வந்த இப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ (Sri Sri) எனப் பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ரவி நெலகுடிதி இயக்கும் இப்படத்தில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பள்ளி சீருடையில் மொட்டை […]

கமல் சாருடன் நடிக்க வேண்டும் – யோகி பாபு ஆசை!

நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள 300வது திரைப்படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ வருகிற ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார். யோகி பாபுவுடன் அனாமிகா மஹி, காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி, எம். சௌந்தர்யா சரவணன், ரஞ்சன் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை பிரதீப் காளிராஜா, படத்தொகுப்பை […]

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய அதிரடி போஸ்டர் வெளியீடு!

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தால் ஏற்படும் பாதிப்புகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. Zee Studios மற்றும் MIG Production இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சேட்டன் DK இயக்கியுள்ளார். சாகர் B. ஷிண்டே எழுதி தயாரித்துள்ள இப்படம், ஜூலை 24, 2026 அன்று இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மனித உடல்நலத்தில் நச்சு பூச்சிக்கொல்லி விவசாயம் ஏற்படுத்தும் தீவிர […]

ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியலை பேசும் புதிய திரைப்படம்!

Tam’s Consultancy தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தமிழ்வாணன் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘Production No: 2’. இப்படத்தை, 2017-ம் ஆண்டு வெளியான ‘போங்கு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாஜ் இயக்குகிறார். ஏலகிரி மலையில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களுக்கு நேர்ந்த அநீதிகளை உண்மைத் தன்மை மாறாமல் பதிவு செய்யும் படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது. பொதுவுடைமை கொள்கைகளின் தாக்கம், சமூக பாகுபாடுகள், கல்வி மற்றும் […]

சினிமா பாடகியாக அறிமுகமாகும் வில்லுப்பாட்டு மாதவி!

வில்லுப்பாட்டு கலை மூலம் மக்களிடையே தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய கலைஞர் மாதவி, தற்போது திரையுலகில் பாடகியாக அறிமுகமாகிறார். தென் தமிழகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் மாதவியின் வில்லிசை நிகழ்ச்சி இடம்பெற்றால், ஏராளமான ரசிகர்கள் திரண்டு வருவது வழக்கம். தனது தனித்துவமான குரல் மற்றும் நாட்டுப்புற இசை பங்களிப்புக்காக பல விருதுகளை பெற்றுள்ள மாதவி, பாரம்பரியக் கலையை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து வருகிறார். இந்நிலையில், ‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் மூலம் அவர் சினிமாவில் பாடகியாக களமிறங்குகிறார். […]

“சிரிப்பும் காதலும் கலந்த முழுமையான பொழுதுபோக்கு படம் தான் ‘மிஸ்டர் பாரத்'” – நடிகர் பாரத்

யூடியூப் உலகிலிருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறை கலைஞர்களின் வரிசையில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்கும் இந்தப் படத்தில் நடிகர் பாரத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் பாரத் மற்றும் இயக்குநர் நிரஞ்ஜன் பட அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். முதலில் ‘மாஸ்டர் பீஸ்’ எனப் பெயரிடப்பட்டிருந்த இந்தப் படம், அதே தலைப்பில் பிற மொழிகளில் திரைப்படங்கள் […]

‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ராஜ்குமார் ராவாக மாறிய சவுரவ் கங்குலி… ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலியின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. சிறந்த இளம் கிரிக்கெட் வீரராக அறிமுகமாகி, இந்திய அணியின் மிகவும் செல்வாக்கு மிக்க கேப்டனாக உயர்ந்த சவுரவ் கங்குலியின் போராட்டம், […]

டாக்ஸிக் படத்தின் தபாஹி பாடல் வெளியீடு!

Monster Mind Creations, KVN Productions மற்றும் Zee Music இணைந்து தயாரித்துள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆடியோ வடிவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல், தற்போது பிரம்மாண்டமான காட்சிகளுடன் வெளியாகி மேலும் கவனம் ஈர்த்துள்ளது. இந்த மியூசிக் வீடியோ மூலம் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் மர்மமான உலகை ரசிகர்கள் முதன்முறையாக காட்சியாக காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திரைப்படத்தின் […]

கட்டில் முதல் ப்ரிட்ஜ் வரை… பாவா லட்சுமணனுக்கு அனைத்தையும் வழங்கிய லெஜன்ட் சரவணன்

மீண்டும் உதவிக்கரம் நீட்டிய லெஜன்ட் சரவணன்… நடிகர் பாவா லட்சுமணனுக்கு முழு வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கி வாக்கை நிறைவேற்றினார்! வீடு இல்லாமல் திண்ணையில் தங்கியிருந்த நடிகர் பாவா லட்சுமணனின் நிலையை அறிந்த லெஜன்ட் சரவணன், முன்பே ₹2 லட்சம் நிதியுதவி வழங்கியிருந்தார். அந்த உதவி நடிகர் கூல் சுரேஷ், லெஜன்ட் ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் மற்றும் பிஆர்ஓ கோவிந்தராஜ் ஆகியோரின் மூலம் சென்றடைந்தது. தற்போது, எம்எல்ஏ ஹாஸ்டலில் தங்கி வரும் பாவா லட்சுமணனுக்கு அளித்த […]

பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் மமிதா பைஜூ நடிக்கும் #PRS01 அறிமுக வீடியோ வெளியீடு!

நடிகராகவும், இயக்குநராகவும் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி தமிழ் சினிமாவின் முக்கியமான இளம் படைப்பாளிகளில் ஒருவராக உருவெடுத்துள்ள பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளராக புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். அவரது தயாரிப்பில் உருவாகும் #PRS01 திரைப்படத்தின் அறிமுக காணொளி அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படத்தின் மூலம், பிரதீப் ரங்கநாதனுடன் பணியாற்றிய ஆறு உதவி இயக்குநர்கள் இணைந்து ‘தி ஆல்ஃபா யூனிட்’ என்ற பெயரில் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த திரைப்படத்தில் தென்னிந்தியாவின் […]